யவனி
யவனி - தேவி யசோதரன் - தமிழில் : சத்தியப்பிரியன் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்ற சரித்திர நாவல்களை உங்களுக்குப் பிடிக்கும் என்றால் நிச்சயம் இந்தப் புதிய நாவலும் உங்களுக்குப் பிடித்துவிடும். முழுக்க வாசித்து முடித்தபிறகும் மீண்டுமொருமுறை, இன்னுமொருமுறை என்று வாசிக்கத் தூண்டும். சோழர் காலப் பின்னணியில் விரியும் பிரமாண்டமான இந்தப் புதினத்தை வாசிக்கும்போது திரைப்படம் போல் காட்சிகள் மனக்கண்ணில் விரிகின்றன. ஆயிரமாண்டுகளுக்கு முந்தைய தமிழகத்தின் அரசியலை, வரலாற்றை, வாழ்க்கை முறையை, போராட்டத்தை அட்டகாசமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் தேவி யசோதரன். வீரத்துக்கும் விவேகத்துக்கும் இலக்கணமாகத் திகழும் யவனியின் சாகசங்கள் நம் நினைவுகளில் நிரந்தரமாகத் தங்கிவிடுகின்றன. நேசம், காதல், பகை, சூது, வன்மம், போராட்டம் என்று கடல் அலைகளுக்குப் போட்டியாகப் பொங்கும் உணர்ச்சிகள் இந்நாவலை மறக்கமுடியாத ஒரு பேரனுபவமாக உயர்த்திவிட்டன. ஆங்கிலத்தில் வெளிவந்து பரவலான கவனத்தை ஈர்த்த ‘எம்பயர்’ நாவலின் அதிகாரபூர்வமான மொழியாக்கம். |