Skip to Content

யுத்த தூஷணம்

யுத்த தூஷணம் - ஷோபாசக்தி நேர்காணல்கள் 2012 - 2023
போரைப் பற்றிய சாகசக்கதைகள் நிரம்பிய அறிவுஜீவிகள், எழுத்தாளர்கள், இயக்கத் தலைமைகளால் போர் எதிர்ப்பை ஓர் உளப்பூர்வ சமூக இயக்கமாக்க ஒருபோதும் மாற்ற இயலாது. இதைப்போன்றே மரணதண்டனை வேண்டாமென்று சொல்லும் துணிபும் தகுதியும் எல்லாவித மரண தண்டனைகளையும் எதிர்ப்பவர்களுக்கே உண்டு.
இந்த நூலின் எந்தப் பக்கத்தைப் பிரித்து விரித்தாலும் எல்லாவிதப் போரையும் எல்லாவித மரணத்தையும் எதிர்த்து படைப்பாக்க மனத்திறப்போடு உயிர்த்திருக்கும் சொற்களாலான உரையாடலையே காணமுடியும். இதுதான் ஷோபாசக்தியை உலகப் படைப்பாளிகளின் வரிசையில் கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறது என்பதைத்தவிர மேலதிக குறிப்புகள் எங்களிடமில்லை. இந்நேர்க்காணல்களில் அதிருப்தியுறுவோர், இன்னும் சில கேள்விகளை எழுப்ப விரும்புவோர் இன்னொரு உரையாடலுக்கு தயாராவதைத் தவிர வேறு எதை நாம் சொல்ல முடியும். ஆமாம் உரையாடல் தொடர்கிறது.
₹ 200.00 ₹ 200.00

Not Available For Sale

This combination does not exist.