யோகி: ஓர் ஆன்மிக அரசியல்
யோகி:
ஓர் ஆன்மிக அரசியல் - சாந்தனு குப்தா - தமிழில்: எஸ் ஜி சூர்யா (The Monk who became the Chief Minister) தமிழில் இளமைத் துடிப்பு மிகுந்தவராக இருந்த அஜய், தன் ஆழ் மன உத்தரவை ஏற்று, கோரக்நாத் மடத்தில் சேர்ந்து சன்யாசம் பெறுகிறார். பொதுவாக ஒருவர் சன்யாசம் பெறுகிறார் என்றால் உலக விஷயங்களில் இருந்து ஒதுங்குகிறார் என்று தான் அர்த்தம். ஆனால், இங்கோ சன்யாசம் பெற்ற பிறகே யோகி ஆதித்யநாத் சமூக சேவைகளுக்குள் தீவிரமாக ஈடுபடுகிறார்! ஏனென்றால் கோரக்நாத் மடாலயம் என்பது அப்படியான சமூக சேவைகளை பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே செய்து வருகிறது. இதைவிடப் பெரிய ஆச்சரியம் என்னவென்றால், அந்த கோரக்நாத் மடாலயத்தின் சார்பில் ஏராளமான முஸ்லிம்களும் பெண்களும் யோகிகளாக தீட்சை பெற்றிருக்கிறார்கள்! சமூக அக்கறையும் சமய நல்லிணக்கமும் கோரக்நாத் மடத்தின் ஆன்மாவாக இருக்கின்றன. எனவே அந்தப் பாரம்பரியத்தில் வந்த யோகி ஆதித்யநாத்தும் அதே பாதையில் அனைவரையும் அரவணைத்து அனைவரின் வளர்ச்சிக்காகவும் பாடுபடுகிறார். ஐந்து முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு ஐந்திலும் வெற்றி பெற்றிருக்கிறார் யோகி. கோரக்நாத் மடத்தின் சார்பில் தினமும் மக்கள் குறை கேட்பு முகாம் நடத்தி அதில் முன்வைக்கப்படும் கோரிக்கைகளை முழுவதுமாக நிறைவேற்றிக் கொடுத்ததன் மூலமே இந்த வெற்றி அவருக்கு சாத்தியமானது. மக்களாட்சி என்பது மக்களின் குறைகளைக் கேட்டுத் தீர்க்கும் ஆட்சிதான் என்பதை நிரூபித்து வருகிறார் ஆதித்யநாத். நாடாளுமன்றக் கூட்டங்களில் தொடர்ந்து பங்கெடுப்பது, தொகுதியின் பிரச்னைகளை விரிவாகப் பேசுவது, தனி நபர் மசோதாக்களைத் தாக்கல் செய்வது என நாடாளுமன்ற நடவடிக்கைகளில் அரசியல் பின்புலம் சார்ந்து செயல்பட்டவர்களை விட மிகத் துடிப்புடன் செயல்பட்டிருக்கிறார் யோகி. |