வட சென்னை
வட சென்னை வரலாறும் வாழ்வியலும் - நிவேதிதா லூயிஸ்
வட சென்னையை ரத்தமும் சதையுமாக நம் கண்முன்னால் கொண்டுவந்து நிறுத்தும் இப்படியொரு வண்ணமயமான நூல் இதுவரை வெளிவந்ததில்லை. புதைந்துபோன கட்டடங்களையும் மறக்கடிக்கப்பட்ட சின்னங்களையும் தேடிக் கண்டடைந்து அறிமுகப்படுத்துவதோடு நின்றுவிடாமல் வட சென்னையின் இதயமாகத் திகழும் அடித்தட்டு மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்வதன்மூலம் ஒரு புதிய வரலாற்றையும் இந்நூல் படைக்கிறது. மேல்கட்டுமானம் அல்ல, அடித்தளமே வரலாற்றை நிர்ணயிக்கிறது என்பதை அழுத்தந்திருத்தமாகப் பதிவு செய்கிறார் நிவேதிதா லூயிஸ். இது ஒரு பயணத்தின் கதை. ஒரு நிலப்பரப்பின் கதை. நம் மண்ணின், நம் மனிதர்களின், நம் மரபுகளின் கதை.