Skip to Content

வரலாற்றுப் பின்னணியில் மணிமேகலை

வரலாற்றுப் பின்னணியில் மணிமேகலை - எஸ். கிருஷ்ணசுவாமி ஐயங்கார் - தமிழில் : ஓ.ரா.ந.கிருஷ்ணன்
​புகழ்பெற்ற முக்கியமான இந்திய வரலாற்று ஆராய்ச்சி வல்லுநர்களில் ஒருவர் எஸ். கிருஷ்ணசுவாமி ஐயங்கார். மணிமேகலை காப்பியத்தின் காலம்பற்றி நூறு ஆண்டுகளுக்கு முன்பு அவர் இயற்றிய ஆங்கில நூலின் தமிழாக்கம் இது. சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரட்டைக் காப்பியங்கள் கி.பி. 200ஆம் ஆண்டுக்கு முற்பட்டவையாக இருக்க வேண்டும் என்று கிருஷ்ணசுவாமி ஐயங்கார் வலிமையான வரலாற்றுச் சான்றுகளோடு நிறுவுகிறார். இது தமிழ் ஆராய்ச்சியாளர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் முன்மாதிரியான ஆராய்ச்சி நூலாகவும் கலங்கரைத் தீபமாகவும் விளங்கக்கூடியது. பௌத்தத் தருக்கவியலையும் அனுமான விளக்கத்தையும் புரிந்துகொள்வதற்கு ஏதுவாக மேலதிக விளக்கங்களும் அட்டவணைகளும் வழங்கப்பட்டுள்ளன.
₹ 390.00 ₹ 390.00

Not Available For Sale

This combination does not exist.