Skip to Content

வந்தார்கள்.. வென்றார்கள்!

வந்தார்கள்.. வென்றார்கள்! - மதன்
ஆனந்த விகடன் வெளியீடுகளின் இணை ஆசிரியராக இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய மதன், ஒரு சிறந்த கார்ட்டூனிஸ்ட் மட்டுமல்ல, உண்மையில் அவர் பல திறமைகளைத் தன்னகத்தே மறைத்து வைத்திருப்பவர். மதன் எதையும் சுவைபடச் சொல்லும் ஆற்றல் படைத்தவர். ஜூனியர் விகடனில் மொகலாய சரித்திரத்தை அவர் எழுதத் தொடங்கியபோது, வடக்கே பாபர் மசூதி சர்ச்சை பெரிய அளவில் கொழுந்து விட்டெரிந்துகொண்டிருந்தது. ‘இந்த நேரத்தில் இப்படி ஒரு தொடரா?!’ என்று சிலர் நினைத்தார்கள். சிலர் பயப்படவும் செய்தார்கள். ஆனால், ‘ஆரம்பித்த நேரம் சரியில்லையோ’ என்று ஒரு கணம்கூட அவர் தயங்கவில்லை. ‘இதுதான் சரியான சமயம்... உண்மைகளைச் சொல்வதனால் நன்மைதான் ஏற்படும்.. தொல்லைகள் வருவதில்லை’ என்ற திடமான நம்பிக்கையோடு எழுதினார். மதன் மொகலாய சரித்திரத்தைச் சொல்லச் சொல்ல, உண்மையில் ஒரு மகத்தான வெற்றியாக தொடர் அமைந்தது. எந்தக் களங்கமும் அவர் எழுத்தில் இருக்கவில்லை. ஒவ்வொரு மன்னரையும் நேசித்து, ஒவ்வொரு நிகழ்ச்சியையும் அவரே நேரில் இருந்து பார்த்ததுபோல எழுதிய பாங்கு அதிசயமானது. வாசகர்களும் ‘சொக்குப்பொடி’ போட்டது போல அவர் எழுத்துக்கு மயங்கினார்கள்.. லட்சக்கணக்கானோர் படித்தார்கள்... பிரமித்தார்கள். எனது இனிய நண்பரும் எனக்குப் பெரும் பக்கபலமாக விளங்கியவருமான மதனின் இணையற்ற சாதனையான இந்தத் தொடரைப் புத்தகமாக வெளியிட்டபோது வாசகர்களிடையே பலத்த வரவேற்பு கிடைத்தது. வாசகர்களின் ஆதரவு தொடர்ந்து இருப்பதால் தற்போது புதிய பதிப்பாக இப்புத்தகத்தை வெளியிடுவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
₹ 360.00 ₹ 360.00

Not Available For Sale

This combination does not exist.

Terms and Conditions
30-day money-back guarantee
Shipping: 2-3 Business Days