வியாபாரத்தில் வெற்றி - தொட்டதெல்லாம் பொன்னாகும்
வியாபாரத்தில்
வெற்றி - தொட்டதெல்லாம் பொன்னாகும் - சோம. வள்ளியப்பன் வர்த்தக உலகைப் புரிந்துகொள்ளவும் அதில் பங்கேற்று உங்களுக்கான இடத்தை உறுதி செய்யவும் வழிகாட்டும் மிக முக்கியமான நூல் இது. வியாபார உலகம் எவ்வாறு இயங்குகிறது? அதில் வெற்றி பெற்றவர்கள் யார்? அவர்கள் எந்த வகையில் தனித்துவமானவர்கள்? அவர்கள் கடைப்பிடித்த வழிமுறைகள் என்னென்ன? லாபம் எப்போது வரத் தொடங்கும்? அதை எப்படிக் கணக்கிடுவது? போட்டியாளர்கள் இல்லாத வணிக உலகம் கிடைக்காது; அவர்களை எப்படிச் சமாளிப்பது? பணியாளர்களை எவ்வாறு நிர்வாகம் செய்வது? அவர்களை எவ்வாறு ஊக்கப்படுத்துவது? இப்படி வியாபாரத்தின் ஒவ்வொரு முக்கியப் பகுதியையும் எடுத்துக்கொண்டு எளிமையாகவும் காத்திரமாகவும் விளக்குகிறார் நம்பர் 1 மேலாண்மை குரு சோம. வள்ளியப்பன். வணிக உலகில் ஏற்கெனவே இருப்பவர்களுக்கும் அடியெடுத்து வைப்பது குறித்து யோசித்துக் கொண்டிருப்பவர்களுக்கும் இது சரியான தேர்வு. |