Skip to Content

வீரபாண்டிய கட்டபொம்மன்

வீரபாண்டிய கட்டபொம்மன் - மு.கோபி சரபோஜி
வீரபாண்டிய கட்டபொம்மன் குறித்து உணர்ச்சிப்பூர்வமாக ஒரு சித்திரத்தைத் தீட்டுவது வெகு சுலபம். அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்து வீரஞ்செறிந்த போராட்டத்தை முன்னெடுத்தவராக அவரை வானளவு உயர்த்தியும் கொண்டாடியும் எழுதுவது இன்னும் சுலபம். நேர் எதிர் முனைக்குச் சென்று, கட்டபொம்மன் சுதந்தரப் போராட்ட வீரரல்ல, அவர் ஒரு கொள்ளையர் என்று வாதிடுவதும் எளிது. இந்த இருவகைப் பதிவுகளும் நிறையவே காணக்கிடைக்கின்றன. மாறாக, நடுநிலையோடு கட்டபொம்மனை ஆராய்ந்து, தரவுகளின் அடிப்படையில் அவர் வாழ்வைத் தொகுத்து, கூர்மையான புரிதலோடும் ஆழ்ந்த வரலாற்றறிவோடும் அவரைப் பற்றிய ஒரு மதிப்பீட்டை உருவாக்குவதுதான் அவருக்கும் வரலாறுக்கும் நாம் செய்யும் நியாயம். கட்டபொம்மன் யார்? அவர் வாழ்ந்த காலம் எத்தகையது? பாளையக்காரர்களையும் ஆங்கிலேயர்களையும் கட்டபொம்மன் எவ்வாறு அணுகினார்? பாஞ்சாலங்குறிச்சியின் வரலாறு என்ன? கட்டபொம்மனின் செயல்பாடுகளை எவ்வாறு புரிந்துகொள்வது? அவரை எப்படி மதிப்பிடுவது? ‘தமிழகப் பாளையங்களின் வரலாறு’ எனும் நூலை முன்னதாக எழுதிய கோபி சரபோஜியின் இந்நூல் கட்டபொம்மனின் வாழ்வையும் காலத்தையும் உள்ளது உள்ளவாறு பதிவு செய்கிறது.
₹ 140.00 ₹ 140.00

Not Available For Sale

This combination does not exist.