வெயிலைக் கொண்டு வாருங்கள்
வெயிலைக் கொண்டு வாருங்கள் - எஸ்.ராமகிருஷ்ணன்
தனது கதைகளில் கற்பனைக்கும் யதார்த்தத்திற்கும் இடையில் அழகான சமநிலையை உருவாக்குகிறார் எஸ். ராமகிருஷ்ணன். தமிழ் சிறுகதையுலகம் நவீன காலகட்டத்தைத் தாண்டியுள்ளது. பல்வேறுபட்ட கதைக்களங்கள், கதையாடல்கள் புனைவுப்பரப்பில் வெளிப்பட்டு வருகின்றன. வெயிலை கொண்டு வாருங்கள் என்ற இந்தத் தொகுப்பு தமிழின் மரபான கதைத் தளத்தைப் புதியதொரு புனைவுவெளிக்கு நகர்த்திச் சென்றிகுக்கிறது. குறுங்கதைகளைத் தனித்த இலக்கியவடிவமாகப் புத்துயிர்ப்புப் பெறச்செய்திருக்கிறார் எஸ்.ரா. மாயமும் யதார்த்தமும் ஒன்றுகலந்த இக்கதைகள் வாசகனுக்கு முற்றிலும் புதியதொரு பரவச அனுபவத்தைத் தருகின்றன என்பதே இதன் சிறப்பு.