Skip to Content

வெற்றி தரும் மந்திரம்!

வெற்றி தரும் மந்திரம்! - எஸ்.கே.முருகன்
தினசரி வாழ்க்கையில் பலவித ஏற்றத்தாழ்வுகளைச் சந்திக்கும் நமக்கு, தன்னம்பிக்கை வார்த்தைகள் தான் பல்வேறு நிலைகளில் பெரிதும் ஆறுதலாக இருக்கும். சாதாரண மனிதர்களுக்கு வரும் துன்பங்கள், தடைகள், சிக்கல்கள் போன்றவை சாதனை மனிதர்களையும் விட்டுவைப்பதில்லை. ‘துன்பங்களும் துயரங்களும் தவிர வாழ்க்கையில் வேறு என்ன மிச்சம்!’ என்று வாழ்க்கையே வெறுத்து, விரக்தியின் விளிம்புக்கு வந்தவர்கள், நம்பிக்கை எனும் மந்திரக்கயிற்றைப் பற்றிக் கொண்டு எப்படி சாதனை படைத்தார்கள்? துயர நிலைகளை எவ்வாறு கையாண்டால் நாமும் சாதனை மனிதனாக முடியும் என்ற சூட்சமத்தைச் சுட்டிக் காட்டும் அந்த மந்திரச் சொற்கள் இந்த நூலில் பரவிக்கிடக்கிறது: தன்மானத்துக்காக எதையும் இழக்கலாம், ஆனால் எதற்காகவும் தன்மானத்தை இழக்கக் கூடாது! வீழ்வதல்ல, வீழ்ந்தே கிடப்பதுதான் தோல்வி! வசதியாக வாழ்வதல்ல, மகிழ்ச்சியாக இருப்பதுதான் முக்கியம்! விழிகளால் மட்டுமல்ல விரல்களாலும் வெல்ல முடியும்! மைக்கேல் பெல்ப்ஸ், நிக் விய்ஜெசிக், வாரிஸ் டேரி, ஜேம்ஸ் கேமரூன், ஜவஹர்லால் நேரு, காமராஜர், பாரதியார் போன்றோர் தங்கள் வாழ்க்கையில் நடந்த சிக்கலான சம்பவங்களை எப்படி எதிர் கொண்டார்கள் என்பதை தன்னம்பிக்கையின் பாதையில் விளக்கியுள்ளார் நூலாசிரியர் எஸ்.கே.முருகன். இவர்கள் கடைப்பிடித்த மந்திரங்களைப் பயன்படுத்தினால், வளமோடு சேர்ந்து நலம் பெறுவது நிச்சயம். குறிப்பாக தோல்வியைச் சந்திக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் உற்சாக டானிக்காக இந்த நூல் அமையும்.
₹ 150.00 ₹ 150.00

Not Available For Sale

This combination does not exist.

Terms and Conditions
30-day money-back guarantee
Shipping: 2-3 Business Days