வைக்கம் வீரரும் ஜெயமோகனின் கயமையும்
வைக்கம் வீரரும் ஜெயமோகனின் கயமையும் - ப.திருமாவேலன்
விருதுநகர் மாவட்டம் வாழவந்தான்புரம் கிராமத்தில் பிறந்தவர் ப. திருமாவேலன். கோயில்பட்டி இலக்குமி ஆலை மேனிலைப் பள்ளி, வ.உசி. அரசு மேனிலைப்பள்ளி ஆகியவற்றில் பள்ளிப் படிப்பை முடித்த இவர், சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் சட்டக்கல்வி கற்றார். விடுதலைக் குயில்கள், இனி, போர்வாள், குங்குமம், விகடன் பேப்பர், தமிழ் முரசு, தினகரன், ஆனந்த விகடன், ஜூனியர் விகடன் ஆகிய இதழ்களில் பத்திரிகையாளராக பணியாற்றிய இவர், காட்சி ஊடகத்தில் முதன்மை ஆசிரியராக இருக்கிறார். ‘இன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்? ‘காந்தி ராமசாமியும் பெரியார் ராமசாமியும்’, ‘காந்தியார் சாந்தியடைய’, ‘அரசியல்: நல்லகண்ணு – அ.மார்க்ஸ் விவாதம், ‘தேர்தல்-2009’, ‘கேட்டையின் கதை’, ”மனிதம் கொன்று மளம் தின்று ஈழம் இன்று’, ‘குற்றவாளிக் கூண்டில் ராஜபக்ஷே ‘நீங்கள் எந்தப் பக்கம்? மார்க்சிஸ்ட்டுகள் சிந்தனைக்கு’, ‘நடக்கட்டும் நாக்கு வியாபாரம்’, ‘சுதேசி தேசம் சுரண்டப்பட்ட வரலாறு” ‘ஊழலுக்கு ஒன்பது வாசல்’, ‘பெரியோர்களே தாய்மார்களே’, ‘யாரைத்தான் எதிர்க்கவில்லை?’, ‘ஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா?’, ‘அவர்கள் அவர்களே’, ‘பண்டிதர் எஸ். எஸ். ஆனந்தரின் ‘தமிழ்நாடு’, ‘இவர் தமிழர் இல்லையென்றால் வேறு எவர் தமிழர்?’ ஆகிய நூல்களை இவர் எழுதி வெளியிட்டுள்ளார்.