வாரம் ஒரு பாசுரம்
வாரம்
ஒரு பாசுரம் - சுஜாதா ஆழ்வார் பாசுரங்களுக்கு அறிமுகமாக ‘வாரம் ஒரு பாசுரம்’ என்ற தொடரை ‘அம்பலம்’ இணைய இதழிலும் ‘கல்கி’ வார இதழிலும் எழுதி வந்தேன். எளிய சில பாசுரங்களை இஷ்டப்படித் தேர்ந்தெடுத்து ஒரு பக்கத்தில் அதற்கு விளக்கம் தந்தேன். அந்தப் பாசுரங்களில் இன்று வழக்கில் இல்லாத சில அரிய சொற்களையும் சுட்டிக் காட்டினேன். இந்தத் தொடருக்கு வாசகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. திவ்யப் பிரபந்தம் முழுவதற்கும் ஒவ்வொன்றாக அர்த்தம் சொல்வதில் ஓரளவுக்கு ஆயாசம் ஏற்பட்டுவிடும். மாறாக, சில பாசுரங்களை அடையாளம் காட்டும்போது மற்ற பாடல்களைத் தேட ஆர்வம் ஏற்படும். அதுதான் இந்த நூலின் குறிக்கோள் நான் கோடு காட்டியதை நீங்கள் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். அந்த அற்புதமான தேடலில் உங்களுக்குப் பல இரத்தினங்கள் கிடைக்கும். - சுஜாதா ‘முதல் தொகுப்பில் 52 பாசுரங்கள் வரைதான் எழுதியிருந்த சுஜாதா, சற்று இடைவெளிக்குப் பின் ‘கல்கி’ யில் மீண்டும் ‘வாரம் ஒரு பாசுரம்’ தொடர்ந்தார். இறுதியாக மருத்துவமனைக்குச் செல்லும் முன்பு வரை அவர் எழுதிய பாசுரங்கள் அனைத்துமாக 68 பாசுரங்கள் கொண்ட புத்தகம்.’ |