Skip to Content

உயிர்ச்சத்துக் கீரைகளும் உணவுச்சத்துக் கிழங்குகளும்

உயிர்ச்சத்துக் கீரைகளும் உணவுச்சத்துக் கிழங்குகளும் - வெ.தமிழழகன்
கீரைகளும், கிழங்குகளும் இயற்கை அளித்த கொடை. நம் உடம்பு சூடு, குளிர் ஆகியவற்றை மையமாக வைத்து இயங்குகிறது. கீரைகள் மற்றும் கிழங்குகளின் தன்மையும் இத்தகையதே. சில கீரைகள் உடலுக்கு குளிர்ச்சியையும், சில சூட்டையும் தரவல்லது. எது எப்படி இருந்தாலும் கீரைகளும், கிழங்குகளும் ஊட்டச் சத்துக்களை அள்ளித் தருபவை; வைட்டமின்களை அளித்து நோய்களைத் தீர்க்கும் வல்லமை படைத்தவை. உதாரணமாக, அகத்திக்கீரை வைட்டமின் ‘ஏ’ சத்து நிறைந்தது. இதைச் சாப்பிடுவதால் ஜலதோஷம், பித்தம் நீங்கும் என்கிறார் நூலாசிரியர் வெ.தமிழழகன். அடிக்கடி பேதியானால், சிறுநீரகக் கோளாறு இருந்தால், பித்தப் பையில் கல் உண்டானால், கருப்பையில் கட்டி இருந்தால் பொதுவாகக் கீரைகளைத் தவிர்க்க வேண்டும். ஆஸ்துமா நோயாளிகள் வெந்தயக் கீரை, மணத்தக்காளிக் கீரை, முளைக் கீரை, பசலைக் கீரையை உண்ணக் கூடாது. வயிற்று வலி இருக்கும்போது புதினா, கொத்துமல்லி, பச்சை மிளகாய் சேர்க்காமல் கீரைகளைச் சமைத்து உண்ண வேண்டும். இதய நோயாளிகள் கட்டாயம் முருங்கை கீரையைத் தவிர்க்கவும் போன்ற, நமக்குத் தெரிந்த கீரைகள் பற்றி தெரியாத தகவல்கள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. அருகம்புல் பற்றிக் கேள்விபட்டிருப்பீர்கள். அருகம்புல் கிழங்கைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அருகம்புல் கிழங்கு உடலுக்கு வலிமையையும், வனப்பையும் தரும் சக்தி கொண்டது என்பது புதிய விஷயம். பன்றி மொந்தன் கிழங்கு என்று ஒரு கிழங்கு இருக்கிறது. இதன் பயன் என்ன? இதைப் போன்று எத்தனையோ கிழங்குகளைப் பற்றியும், கீரைகளைப் பற்றியும் பயனுள்ள தகவல்கள் இந்த நூலில் கொட்டிக் கிடக்கின்றன. எந்தக் கீரையை எந்தப் பருவத்தில் சாப்பிடலாம், எந்தக் கீரையுடன் எதைச் சேர்த்தால் அதிகப் பயன் தரும் போன்றவற்றைப் பற்றி சுவைக்கச் சுவைக்க ‘டிப்ஸ்’ தருகிறார் நூலாசிரியர். உடல் மேல் அக்கறை கொண்டவர்கள் படித்துப் பயன் பெறக்கூடிய நூல் இது.
₹ 130.00 ₹ 130.00

Not Available For Sale

This combination does not exist.

Terms and Conditions
30-day money-back guarantee
Shipping: 2-3 Business Days