Skip to Content

உயிர் : ஓர் அறிவியல் வரலாறு

உயிர் : ஓர் அறிவியல் வரலாறு - நன்மாறன் திருநாவுக்கரசு

உயிர் என்றால் என்ன? இந்த எளிய, சின்னஞ்சிறிய கேள்விக்குப் பதில் அளிக்கவேண்டுமானால் முழுப் பிரபஞ்சத்தின் கதையையும் சொல்லவேண்டும். அணு, தனிமம், நட்சத்திரம், இனப்பெருக்கம், பரிணாமக் கோட்பாடு என்று கிளைகளைப் பரப்பி, பல துறைகளுக்குள் நுழைந்து பார்க்கவேண்டும். எண்ணற்ற கேள்விகளை எழுப்பவேண்டும். புதிய, புதிய கோணங்களில் நம்மையும் நம் உலகையும் அதில் வாழும் எண்ணற்ற உயிர்களையும் ஆராயவேண்டும். இந்தக் கையடக்க நூல் உயிரெனும் அற்புதத்தின் வரலாற்றை எளிமையாகவும் கோர்வையாகவும் விவரிக்கிறது. கனமான, கடினமான பல தலைப்புகளைச் சுவையாக, கதைபோல் எடுத்துச் சொல்கிறது. உயிரியல், வேதியியல், வானியல், மரபணுவியல் என்று பல துறைகளைச் சுவையாக அறிமுகப்படுத்துகிறது. உயிர் குறித்த நம் கண்ணோட்டத்தை விரிவாக்கிய முக்கிய ஆய்வாளர்களின் பங்களிப்புகளை எடுத்துச் சொல்கிறது. இந்து தமிழ் திசையில் அறிவியல் கட்டுரைகள் எழுதிவரும் நன்மாறன் திருநாவுக்கரசுவின் இந்நூல் இத்துறையில் ஆர்வம் கொண்டிருக்கும் அனைவரையும் நிச்சயம் ஈர்க்கப்போகிறது. குறிப்பாக, மாணவர்களுக்குப் பரிசளிக்கவேண்டிய முக்கியமான நூல்.

₹ 225.00 ₹ 225.00

Not Available For Sale

This combination does not exist.