Skip to Content

உடைந்த கண்ணாடிகள்

உடைந்த கண்ணாடிகள் - ராபின் வியாத்
தனிமனித சுதந்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வரும் இன்றையக் காலகட்டத்தில், புதுமணத் தம்பதிகள் விட்டுக் கொடுத்து வாழ்வது என்பதே இல்லாத ஒன்றாகிவிட்டது. கட்டுப்பாடான வாழ்க்கை முறைக்கும், நவீனகால நடைமுறைக்கும் இடையில் தொடங்கும் மோதல், நாளடைவில் பரஸ்பர உறவுகளிடையே குற்றம் காணும் சூழ்நிலையை உருவாக்கிவிடுகிறது. உறவுகளிடம் நிலவும் கௌரவப் பிரச்னை, உணர்வு ரீதியான பொருத்தமின்மை, உடலுறவு சம்பந்தமானப் பிரச்னை, குழந்தைப் பேறின்மை தொடர்பான பதட்டம்... இப்படி, குடும்ப வன்முறைகளின் உச்சமாக மரணங்கள் சம்பவிப்பது தற்போது சர்வ சாதாரணமாகிவிட்டது. வரதட்சணைக் கொடுப்பது பற்றி பெண் வீட்டாரின் விளக்கம், தம்பதியரிடையே ஏற்படும் மனக்கசப்புக்கான காரணம், பாரம்பரியமாக இருந்துவரும் மாமியார் - மருமகள் யுத்தத்துக்கான பின்னணி, இதில் கணவனின் பங்கு, இதற்கு சமூகத்தின் பார்வையில் உள்ள பதில், சட்டரீதியான நடைமுறைகள்... போன்ற குடும்பப் பிரச்னைகளுக்கான தெளிவான தீர்வுகளை ‘BROKEN MIRRORS’ என்ற ஆங்கில நூலில் விளக்கியுள்ளனர் நூலாசிரியர்கள் ராபின் வியாத் மற்றும் நஸியா மஸூத். ஆங்கில நூலின் சாரத்தை உள்வாங்கி, அதன் அழகும் ஆழமும் குலையாதபடி அழகு தமிழில் மொழிபெயர்த்துள்ளார் லதானந்த். அத்தியாயம் தோறும் ‘கலந்தாய்வுக் குறிப்புகள்’ என்ற தலைப்பின் கீழ் அந்தந்தப் பிரச்னையின் பல்வேறு கோணங்களையும், அதன் பிரதிபலிப்புகளையும் அலசி ஆராய்ந்திருப்பது இந்த நூலுக்கே உரிய தனிச்சிறப்பு. ‘வரதட்சணை, வாழ்வைக் கெ(ா)டுக்குமா?’ என்ற கேள்விக்கு விடை தெரியாமல் தவித்து நிற்கும் ஒவ்வொருவருக்கும் இந்த நூல் நல்ல வழிகாட்டி.
₹ 120.00 ₹ 120.00

Not Available For Sale

This combination does not exist.

Terms and Conditions
30-day money-back guarantee
Shipping: 2-3 Business Days