Skip to Content

உஷார் உள்ளே பார்

உஷார்!   உள்ளே பார்! - சோம. வள்ளியப்பன்
உங்கள் மனத்தின் சக்தி என்னவென்பது உங்களுக்குத் தெரியுமா? இந்தப் புத்தகம் உங்கள் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாகப் புரட்டிப்போடப் போகிறது என்பதை அறிவீர்களா? மனித மனம், விசித்திரங்களின் மூட்டை. நீங்கள் நம்பமுடியாத பல திறமைகள் அதற்கு உண்டு. நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, அதை நடத்திக் காட்டும் அற்புத ஆற்றல் உங்கள் மனத்துக்கு உண்டு. தேசத்தை ஆள விரும்புகிறீர்களா? ஆளலாம். கோடி கோடியாகச் சம்பாதித்துக் குவிக்க விரும்புகிறீர்களா? செய்யலாம். போட்டிகளில், தேர்வுகளில் மாபெரும் வெற்றி பெற விரும்புகிறீர்களா? மிகவும் சுலபம். எல்லாம் உங்கள் மனத்தை நீங்கள் எப்படி அடக்கி ஆள்கிறீர்கள் என்பதில் இருக்கிறது! மனத்தை அடக்கி ஆள்வது முனிவர்களுக்கு மட்டுமே கைவந்த விஷயமல்ல. உங்களாலும் முடியும். நீங்கள் தவம் இருக்க வேண்டும். தாடி வளர்த்துக்கொண்டு தனிமை தேடிப் போக வேண்டாம். இருந்த இடத்தில் இருந்தபடி சாதிக்கலாம்! உள்ளுக்குள் இருக்கும் உங்கள் மனத்தைத் தூக்கி எடுத்து உங்கள் சட்டை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு நினைத்த நேரத்தில் நினைத்தபடி அதை ஆட்டிப் படைக்க முடியும்! எப்படி? அதைத்தான் சொல்லித் தருகிறது இந்தப் புத்தகம். உங்கள் வெற்றி ஒன்றுதான் இதன் நோக்கம். அதுவும் சாதாரண வெற்றியல்ல. பிரும்மாண்டமான வெற்றி. இமாலய வெற்றி. இப்படியொரு எளிமையான, விறுவிறுப்பான புத்தகத்தை இதுவரை நீங்கள் வாசித்திருக்க மாட்டீர்கள்!

₹ 225.00 ₹ 225.00

Not Available For Sale

This combination does not exist.