Skip to Content

உன் கண்ணில் நீர் வழிந்தால்...

உன் கண்ணில் நீர் வழிந்தால்... - சேவற்கொடியோன்
பாசம், விரோதம், பகை, கோபம், காதல், நட்பு இவையெல்லாம் மனிதனின் மனதில் இயல்பாகவே எழும் உணர்ச்சிகள். இவை அத்தனையும் கொண்ட விறுவிறுப்பான நாவல் இது. தான் காதல் கொண்ட பெண் தன்னை சகோதரனாகக் கருதுகிறாள் என்பதை அறிந்துகொண்ட ஒருவன் அதிர்ச்சிக்கும் வெறுப்புக்கும் ஆளாகாமல், அந்தப் பெண்ணுக்காக தன் வாழ்க்கையையே தியாகம் செய்கிறான் என்பதே இந்த நாவலின் கரு. `சேவற்கொடியோன்' எனும் புனைபெயரில் ஆனந்த விகடனில் அமரர் எஸ்.பாலசுப்ரமணியன் எழுதிய முதல் தொடர்கதை இது. உறவுகளுக்கிடையே எழும் கருத்து வேறுபாடுகள், அதனால் நிகழும் எதிர்பாராத சம்பவங்கள், சந்தேகத்தால் ஏற்படும் விளைவுகள் என அனைத்து உணர்வுகளையும் தன் விறுவிறுப்பான எழுத்து நடையால் சுவாரஸ்யமாகக் கதையைக் கொண்டுபோகிறார் நூலாசிரியர். ஓவியர் கோபுலுவின் தத்ரூபமான ஓவியங்கள், கதையின் பாத்திரங்களை உயிரோட்டம் கொண்டவை யாக மாற்றியிருக்கின்றன. ஒரு வருடத்துக்கு மேல் ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த இந்தத் தொடர்கதை இப்போது நூலாக வெளிவந்திருக்கிறது. உணர்ச்சிகளின் கலவையான இந்நாவல் வாசிக்க வாசிக்க புது உணர்வைத் தரும்!
₹ 599.00 ₹ 599.00

Not Available For Sale

This combination does not exist.