Skip to Content

உலக சரித்திரம்

உலக சரித்திரம் (2 பாகங்கள்) - ஜவஹர்லால் நேரு
உலகின் பிரபலமான அரசியல் தலைவராக இருந்தாலும் உலகின் தலைசிறந்த வரலாற்றுவியலாளராக ஜவஹர்லால் நேரு இருந்ததில்லை. இருந்தாலும் 'Glimpses of World History' என்ற தலைப்பில் அவர் எழுதிய புத்தகம் உலகின் எந்தவொரு வரலாற்று அறிஞரின் படைப்புக்கும் சமமாகவே இன்றும் விளங்குகிறது. நேருவின் அந்த புத்தகத்தை உலக சரித்திரம் என்ற பெயரில் முன்னாள் மத்திய அமைச்சர் ஓ.வி.அளகேசன் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். இன்றளவும் இதுவே முழுமையான மொழிபெயர்ப்பாகவும் இருக்கிறது. உண்மையில் இந்தப் புத்தகத்தை நேரு எழுதியபோது அவர் சிறையில் இருந்தார். ஆனாலும் தனக்குத் தெரிந்த தகவல்களை தனது மகளான இந்திராவுக்கு கடிதங்கள் வாயிலாக எழுதியதே, 1934-இல் புத்தகமாக வெளிவந்தது. தன் மகளுக்கு எழுதிய கடிதங்களில் உலக நாடுகளின் தோற்றம், பல நாடுகளில் சமய, சமூக, பண்பாட்டு நிலை, புரட்சிகள், உலகப்போர்கள் போன்றவை உள்ளிட்ட பல செய்திகளைப் பற்றி விவாதிக்கிறார் நேரு. எழுதி 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் அனைத்து புத்தகக் கண்காட்சிகளிலும், புத்தக கடைகளிலும் அதிகம் விற்பனை விற்பனையாகும் நூலாக இன்றும் முத்திரை பதித்துக் கொண்டிருக்கிறது. கிறிஸ்து பிறப்புக்கு முன்பு 6 ஆயிரம் ஆண்டுகளில் இருந்து நேரு வாழ்ந்த காலம் வரையிலான உலகத்தை ஒரே புத்தகத்தில் அடக்கியதே அவரின் மிகப் பெரிய சாதனை. உலகத்தின் வரலாற்றை அறிந்துகொள்ள முயற்சிக்கும் எவரது கையிலும் இருக்க வேண்டிய நூல் 'உலக சரித்திரம்'. இது என்றும் அழியாத பொக்கிஷம்.
₹ 1,600.00 ₹ 1,600.00

Not Available For Sale

This combination does not exist.