Skip to Content

தூப்புக்காரி

தூப்புக்காரி - மலர்வதி
‘துப்புரவுத் தொழிலாளியின் தொழில் சூழலின் தனித்தன்மை, மிகுந்த உக்கிரத்துடன் நாவலில் உணர்த்தப்படுகிறது. தகழியின் ‘தோட்டியின் மகன்’ நாவலை வாசித்துக்-கொண்டிருப்பதாக ஒரு பிரமை தட்டியது…. கதைப்பயணம் செய்கிற களங்களும், மனித மனங்களும், மொழி பிரயோகங்களும், நம்மை வாரிச்சுருட்டி அள்ளிக் கொள்கிற வசீகரமும் நம்பகத்தன்மையும் மிக்கதாக இருக்கின்றன. நாவல் சாதிய வேறுபாடுகளையும், வர்க்க முரண்களையும் ஒரு சேர உணர்த்துகிறது. பிரமிக்க வைக்கிற கலாபூர்வ அழகியலோடு, ஒரு முற்போக்குத் தத்துவ நோக்கில் ஒரு குறிப்பிட்ட பகுதி சமூக எதார்த்தம் நாவலாக, இலக்கியப் படைப்பாக வெளிப்பாடு கொண்டிருக்கிறது.’ – மேலாண்மை பொன்னுசாமி. ‘இதுவரை வாசகரின் புலனுக்குப் புலப்படாத துண்டு துண்டான பீயையும், திட்டு திட்டான தூமை ரத்தத்தையும் அது ஏற்படுத்தும் அருவருப்பையும்….அழுகிப்போன அழுக்குகள் அள்ளப்படும் போது குபீரென எழும்பும் குடலைப் புரட்டும் வாடையையும்… இப்படி சமூகக் குண்டியைக் கழுவி, குளிப்பாட்டி, பவுடருக்கு பதிலாக பிளீச்சிங் பவுடர் பூசி, ஒப்பனை பண்ணி வாழும் இந்தத் தாய்மாரை இந்த நன்றி கெட்ட சமூகம் நாயிலும் பன்றியிலும் கீழாக நடத்தும் கேவலத்தை, மனித மனதை அழவைக்கும் சித்திரங்களாக, அணு அணுவாக வரைந்து காட்டியிருக்கிறார் மலர்வதி… இது ஒரு காத்திரமான தலித்திய நாவல்; தீவிரமான பெண்ணிய நாவல்.

₹ 225.00 ₹ 225.00

Not Available For Sale

This combination does not exist.