Skip to Content

தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே!

தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே! - டாக்டர் என்.ராமகிருஷ்ணன்
நன்றாகத் தூங்கினால் டாக்டரிடம் போகவே வேண்டாம். ஓவராகத் தூங்கும்போதோ தூங்காமலேயே இருக்கும்போதோ உடல் நலம் பாதிக்கப்படும், தூக்கத்தால் உடல் எவ்வாறு ஆரோக்கியமாக இருக்கும் என்பதை விளக்கும் மருத்துவ நூல் இது. மனிதனுக்கு சராசரியாக 8 மணி நேரத் தூக்கமும் குழந்தைகளுக்கு 10 மணி நேரத் தூக்கமும் தேவை. இதைக் குறைக்காமல் நம் வேலை பளுவின் இடையிலும் தேவையான தூக்கத்தைக் குழந்தைகளுக்கு எப்படிக் கொடுக்கலாம், நாம் எப்படி நிறைவாகத் தூங்கலாம் என்று விளக்கியிருக்கிறார் நூல் ஆசிரியர் டாக்டர் ராமகிருஷ்ணன். முதியவர்களுக்கு ஏற்படும் மனக் குறை என்ன, அதனால் எப்படித் தூக்கம் குறைகிறது, அதை நிவர்த்தி செய்யும் வழி முறைகள் என்னென்ன ஆகியவற்றை விளக்கியிருக்கிறார். இரவு ஷிஃப்ட் வேலை செய்பவர்கள் இரவில் தூங்குவதைப் போலவே பகலில் நிம்மதியாகத் தூங்க முடியாது என்பதுதான் பொதுக் கருத்து. ஆனால், அவர்களும் பகலில் வேலை செய்து இரவில் நிம்மதியாகத் தூங்குபவர் களைப்போலவே பகலிலேயே குறைவில்லாமல் நிம்மதியாகத் தூங்கி ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கான பல வழிகள் இந்த நூலில் சொல்லப்பட்டு இருக்கின்றன. இள வயதில் சரியாகத் தூங்கினால் முதுமையில் என்னென்ன அவலங்கள் ஏற்படாது; பகல் தூக்கத்தால் ஏற்படும் கெடுதி; எது குட்டித் தூக்கம் போன்ற ஆரோக்கியத்துக்குத் தேவையான பல பயனுள்ள விஷயங்கள் நூல் முழுவதும் விரவிக் கிடக்கின்றன. டாக்டர் விகடனில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற தொடர் இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில். தூக்கத்துக்காக ஏங்குபவர்கள் அனைவரும் படித்துப் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்.
₹ 75.00 ₹ 75.00

Not Available For Sale

This combination does not exist.