Skip to Content

டி.என்.பி.எஸ்.சி. குரூப் - IIA தேர்வு

டி.என்.பி.எஸ்.சி. குரூப் - IIA தேர்வு - டாக்டர் சங்கர சரவணன்
டி.என்.பி.எஸ்.சி. குரூப் - IIA தேர்வு எழுதுபவர்களுக்காகவே இந்த நூல் பிரத்யேகமாக வெளியிடப்படுகிறது. TNPSC-ன் குரூப் - IIA தேர்வு மற்றும் குரூப் - II முதன்மைத் தேர்வு ஆகிய இரண்டு தேர்வுகளுக்கும் சேர்த்து ஒரே நூலாகத் தந்துள்ளார் டாக்டர் சங்கர சரவணன். 2013, 2014, 2015-ம் ஆண்டு குரூப்-II தேர்வு வினாத்தாள்கள்-விடைகளுடன், தேவையான இடங்களில் விரிவான விளக்கங்களுடன் தந்துள்ளார் நூலாசிரியர். மத்திய அரசின் நிதி ஆயோக், ஜன் தன் யோஜனா, பிரதமரின் முத்ரா வங்கி போன்றவற்றைப் பற்றிய குறிப்புகளும் தமிழ்நாடு தொலைநோக்கு-2023, உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2015 போன்ற விவரங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாட இறுதியில் கொடுத்துள்ள, பட்டப்படிப்பு தர பொது அறிவு பயிற்சி வினாக்கள், தேர்வு எழுதுகிறவர்கள் எளிதில் நினைவுகொள்ளும் வகையில் அமைக்கப்பட்டிருப்பது இந்தப் புத்தகத்தின் தனிச்சிறப்பாகும். விருது மற்றும் பரிசு விவரங்கள் 2015 வரை அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இந்த நூலில் உள்ள தகவல்கள் அனைத்தும் 2015 அக்டோபர் வரை அப்டேட் செய்யப்பட்டுள்ளது. வினா-விடைகளை தமிழ், ஆங்கிலத்தில் தந்திருப்பதோடு நூலின் இறுதியில் கலைச்சொல் அடைவும் தரப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பம்சம். பொது அறிவுக் களஞ்சியம் வரிசை நூல்களைப் போன்று இந்த குரூப்-IIA தேர்வு நூலும் தேர்வர்களுக்கு மிகுந்த பயனளிக்கும் என்பது திண்ணம்.
₹ 455.00 ₹ 455.00

Not Available For Sale

This combination does not exist.