டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு
டாக்டர்
நரேந்திரனின் வினோத வழக்கு - சுஜாதா டாக்டர் நரேந்திரன் அரசாங்க மருத்துவமனையில் பணியாற்றுகிறவர். மருத்துவமனையின் அடுத்த டீனாக வர வேண்டியவர். வெளிநாடுகளில் படித்துப் பல பட்டங்கள் வாங்கியவர். அவர் மீது ஒரு கோமா நோயாளியின் ஆக்ஸிஜன் போன்ற ஜீவாதாரக் குழாய்களைப் பிடுங்கி மூச்சை நிறுத்தியது, அரசு மருத்துவமனையின் விதிகளை மீறி ஒரு இளம் பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்து வைத்தது, தடை செய்யப்பட்ட மருந்து ஒன்றை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனுக்குக் கொடுத்து அவன் இறந்து போகக் காரணமாக இருந்தது என்று மூன்று குற்றங்கள் சுமத்தப்பட்டு கோர்ட்டில் வழக்கு தொடங்குகிறது. ஜட்ஜின் பரிந்துரையின் பேரில், இந்தக் கேஸுக்குள் கணேஷும், வசந்தும் நுழைகிறார்கள். டாக்டரின் கேசை எடுத்து நடத்துகிறார்கள். பிறகென்ன சுஜாதாவின் கூர்மையான எழுத்துகளில் வாதப் பிரதிவாதங்கள் அனல் பறக்கின்றன. |