Skip to Content

தமிழக அரசியல் வரலாறு - பாகம் 2

இரு பாகங்களில் விரியும் தமிழக அரசியல் வரலாற்றின் இரண்டாம் பாகம் இது. எம்.ஜி.ஆர் ஆட்சியைப் பிடித்தது தொடங்கி, ஆட்சிக்கால சாதனைகள், சர்ச்சைகள் என அனைத்தையும் அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கும் இந்தப் புத்தகத்தில், ஈழத்தமிழர் பிரச்னை, விடுதலைப் புலிகள் தமிழகத்தில் தடம் பதித்த வரலாறு, மத்திய, மாநில அரசுகளின் ஈழக் கொள்கை, ராஜீவ் படுகொலை என்று தமிழகத்தோடு இரண்டறக் கலந்துவிட்ட ஈழப் போராட்டப் பக்கங்கள் சிறப்புக் கவனம் பெறுகின்றன. காவிரி நீர்ப்பங்கீடு, இட ஒதுக்கீடு போன்ற தமிழ்நாட்டின் உயிர்நாடிப் பிரச்னைகளை அதன் அரசியல், வரலாற்றுப் பின்னணியுடன் விவரிக்கும் இந்தப் புத்தகம், அண்டை மாநில உறவுகளையும், மத்திய மாநில உறவுகளில் நிலவும் அரசியல் விளையாட்டுகளையும் படம்பிடிக்கிறது. இன்றைய தமிழக அரசியலின் புதிய சக்திகளாக உருவெடுத்திருக்கும் பாமக, மதிமுக, புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள் போன்ற அரசியல் கட்சிகள் உருவான பின்னணியைப் பதிவுசெய்திருப்பதோடு, தமிழகத்தில் நிலவும் சாதி மற்றும் வாக்கு அரசியலின் பரிணாம வளர்ச்சியையும் சுட்டிக்காட்டுகிறது இந்தப் புத்தகம். 2000-ம் ஆண்டு நிகழ்வுகளோடு நிறைவு பெறும் இந்நூலின் களம் நம் காலகட்டத்துக்கு மிகவும் நெருக்கமானது. ஆர். முத்துக்குமார் இந்தப் புத்தகத்தில் அளித்திருக்கும் விரிவான வரலாற்றுப் பின்னணியில் இன்றைய அரசியலைப் பொருத்திப் பார்க்கும்போது பல புதிய அர்த்தங்கள் காணக்கிடைக்கின்றன.
₹ 450.00 ₹ 450.00

Not Available For Sale

This combination does not exist.