Skip to Content

தமிழச்சி முதல் அமலாபால் வரை

தமிழச்சி முதல் அமலாபால் வரை - இரா.சரவணன்
‘வசீகரிக்கும் அழகைப் பெற, வாசனைமிக்க திரவியங்களுடன் கூடிய பல்வேறு க்ரீம்களை வாரிப் பூசிக்கொள்ள வேண்டும்’ என தோன்றுவது இயல்பு. ஆனால், பெற்றோர் நமக்கு அளித்துள்ள மேனியை எந்தவித செயற்கை வஸ்துகளாலும் சீரழித்துவிடாமல் இயற்கையான முறையில் காப்பதே உண்மையான அழகு! பொதுவாக, அழகுக் குறிப்புகள் என்றாலே அதை அறிந்துகொள்வதில் அனைவருக்கும் விருப்பம் உண்டு. ஆனால், அன்றாட நடவடிக்கைகளின் மூலமே அழகுக்கு அழகு சேர்க்க முடியும். ஆனந்த விகடன் இதழ்களில் ‘டாக்டர் விகடன்’ பகுதியில், அழகுக் குறிப்புகள், ஆரோக்கியத்தை காக்கும் வழிமுறைகள்... என, பல துறைகளில் ஒளிவீசும் பிரபலங்களின் ஃபிட்னெஸ் ரகசியங்கள் கட்டுரைகளாக வெளிவந்து வாசகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றன. தமிழச்சி தொடங்கி அமலா பால் வரையிலான அழகுப் பெண்களின் ஃபிட்னெஸ் ரகசியங்கள், அழகை ஆராதிக்கும் அனைவருக்கும் வழிகாட்டலாக அமைந்திருக்கிறது. ‘எளிமையே அழகு’, ‘இயல்பும் இயற்கையுமே அழகு’, ‘புன்னகை மாறா முகமே அழகு’... என வி.ஐ.பி. பெண்கள் சொல்லியிருக்கும் அர்த்தங்கள் விதம் விதமானவை. சரியான உணவு முறை, உடற்பயிற்சி, ஆயில் புல்லிங் செய்யும் முறை, ரத்த அழுத்தம் தொடங்கி முகப்பரு வரை அனைத்துக்கும் தெளிவான தீர்வு... என உடல் அழகை மேம்படுத்தும் பல தகவல்கள் இந்நூலில் இருக்கின்றன. அழகுச் சாதனப் பொருட்கள் எதையும் பயன்படுத்தாமல், நாம் உண்ணும் உணவின் மூலமே அனைவரையும் அசரவைக்கும் அழகைப் பெற முடியும் என்பதை இந்த நூல் தெளிவாக விளக்குகிறது.
₹ 85.00 ₹ 85.00

Not Available For Sale

This combination does not exist.

Terms and Conditions
30-day money-back guarantee
Shipping: 2-3 Business Days