தமிழ் சினிமா : நவீன அலையின் புதிய அடையாளங்கள்
தமிழ் சினிமா : நவீன அலையின் புதிய அடையாளங்கள் - சுரேஷ் கண்ணன் "தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க சில மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. குறும்பட உலகில் இருந்து பல புதிய இளம் இயக்குநர்கள் வெள்ளித் திரையில் நுழைந்து ஒரு நவீன அலையை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். உலக சினிமாவின் பரிச்சயமும் தாக்கமும் கொண்ட அவர்களின் மூலமாக தமிழ் சினிமாவிலும் நுட்பம், விவரிப்பு பாணி, திரைக்கதை, திரைமொழி என்று பல தளங்களில் புத்துணர்வான கோணங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. தரம் எனும் அளவுகோலில் தமிழ் சினிமா கடக்க வேண்டிய தூரம் இன்னமும் அதிகமிருந்தாலும் இது போன்ற புதிய அடையாளங்கள் நமக்கு நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அளிக்கின்றன. தோராயமாக கடந்த ஆறு ஆண்டுகளில் உருவான பல தமிழ் திரைப்படங்கள் இதில் அலசப்பட்டுள்ளன. திரைப்படத்தின் உள்ளடக்கத்தைப் பற்றி மட்டுமல்லாமல், சமூகம், கலாசாரம், பண்பாடு, உளவியல் என்று பல தளங்களையும் இக்கட்டுரைகள் நுணுக்கமாக ஆராய்கின்றன. இதில் உள்ள ஒவ்வொரு திரைப்படமும் தமிழ் சூழலில் அதனளவில் முக்கியமானது. அந்த வகையில், ஒரு காலகட்டத்து தமிழ் சினிமாவின் உலகை ஒரு குறுக்குவெட்டுப் பார்வையில் அறிய இந்தப் புத்தகம் உதவிகரமாக இருக்கும்." |