தலித் பார்ப்பனன்
தலித் பார்ப்பனன் - சரண்குமார் லிம்பாலே தமிழில்: ம.மதிவண்ணன்
நாமறிந்த மற்ற தலித் எழுத்தாளர்களில் இருந்து சரண்குமார் லிம்பாலேயைத் தனித்து காண்பிப்பது அவருடைய சுயவிமர்சனமும் சுய எள்ளலும் ஆகும். தனக்கு வெளியே தொழிற்படும் ஜாதியத்தையும், மதவாதத்தையும் தோலுரிப்பதோடு நின்று விடுவதில்லை அவரது கதைகள். தலித்துகளாகிய தங்களுக்குள் ஆதிக்கத்துக்கு ஆதரவாக, இணக்கமாக போவதற்கான கூறுகள் என்னென்ன விதங்களில் வடிவங்களில் வந்து குடியேறி இருக்கின்றன என்பதையும் தயவு தாட்சண்யமின்றி விசாரணை செய்பவை.