தலைகீழ் விகிதங்கள்
தலைகீழ் விகிதங்கள் - நாஞ்சில் நாடன்
மனிதனின் அகவேட்கைக்கும் யதார்த்தத்துக்குமான இடைவெளிகளைச் சமன்செய்வதே வாழ்வின் சவால். 70களில் கிராமப்புறப் பட்டதாரி இளைஞர்கள் உறவுகள் சார்ந்தும் நிலம் சார்ந்தும் எழுந்த நிர்பந்தங்களுக்குத் தமது சுயத்தை இழக்க நேரிட்டது. ஆனால் இன்றையக் கணினியக இளைஞர்கள் தனி அடையாளங்களை இழந்து பொது அடையாளங்களுக்குள் தங்களது இருப்பைப் பத்திரப்படுத்திக்கொள்கின்றனர். தலைகீழ் விகிதங்கள் நாவலை இன்று படிக்கும் போது நேற்றைய தலைமுறையினரின் அகப் போராட்டங்களின் வழியாக, இன்றைய இளைஞர்களின் மனச் சிக்கல்களை நம்மால் அக்கறையுடன் அனுசரணையுடன் புரிந்துகொள்ள முடிகிறது.