திருமந்திரம்
திருமந்திரம் : சர்வமும் இத்னுள் அடங்கும் - இர. வாசுதேவன் யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்! இந்த உயர்ந்த நோக்கோடு உருவானதே திருமந்திரம். வேதாந்தம் - சித்தாந்தம், சித்தி - முக்தி, யாகம் - யோகம் அறிந்துகொள்ள வேண்டியவை ஆயிரம் விஷயங்கள்! கனம்மிகுந்த காரணத்தால், புரியாத விஷயங்களையெல்லாம் உப்பு, புளி, மிளகாய் சமாசாரங்களாக எளிமைப்படுத்தியது திருமந்திரம். தேசிய நெடுஞ்சாலையில் 'சுமோ'வில் போவதுபோல சுகமான நடையில் நூலாசிரியர் இர.வாசுதேவன் நம்மை அழைத்துச்செல்கிறார். சென்னை ரிசர்வ் வங்கியில் பணிபுரியும் இவர், உலகமெங்கும் இருக்கும் தமிழர்கள்மீது காதல் கொண்டவர். |