Skip to Content

தினமணி பார்ப்பனியத்தின் முகமூடிகள் : ஒரு விவாதம்

தினமணி பார்ப்பனியத்தின் முகமூடிகள் : ஒரு விவாதம் - எஸ்.வி.ராஜதுரை - வ.கீதா
நூல் குறிப்பு:

“பார்ப்பனர்கள் எப்போதுமே தமக்குக் கூட்டாளிகளைக் கொண்டிருந்தனர் என்பதையும் அவர்கள் தமக்குக் கீழ்ப்பட்டு ஒத்துழைப்பதாக இருந்தால் அவர்களுக்கு ஆளும் வர்க்கம் என்ற தகுதியைத் தருவதற்குத் தயாராக இருந்தனர் என்பதையும் வரலாறு காட்டுகிறது. பண்டைக்காலத்திலும் மத்திய காலத்திலும் அவர்கள் சத்திரியர்கள் அல்லது ராணுவ வர்க்கத்தினருடன் அணி சேர்ந்து கொண்டனர். இருவரும் சேர்ந்து மக்களை ஆண்டனர்; இல்லை, மக்களை நசுக்கினர் – ஒருவர் தன் பேனாவைக் கொண்டும், மற்றவர் தன் வாளைக் கொண்டும், இப்போதோ பார்ப்பனர்கள், பனியா என்றழைக்கப்படும் வைசிய வர்க்கத்துடன் நேச அணி உருவாக்கியுள்ளனர். கூட்டணியில் ஏற்பட்டுள்ள மாற்றம் இயல்பானதே. வர்த்தகம் மேலோங்கியுள்ள இந்த நாட்களில் வாளைக் காட்டிலும் பணம் அதிகம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அரசியல் எந்திரத்தை இயக்குவதற்குப் பணம் தேவை. பனியாக்களிடமிருந்துதான் பணம் வர வேண்டும். காங்கிரசுக்கு பனியா பணம் கொடுக்கக் காரணம் காந்தி பனியாவாக இருப்பதுதான். அரசியலில் பணத்தை முதலீடு செய்வது பெரும் லாபம் ஈவுகளைப் பெற்றுத் தரும்.”
ஆசிரியர் குறிப்பு:
தமிழ்நாட்டின் அறிவுஜீவியான எஸ்.வி. ராஜதுரை, கோவையில் பிறந்தவர். மார்க்சியவாதியான இவர் பெரியாரியம், அம்பேத்கரியம் சார்ந்து ஆய்வு நூல்களை எழுதி எழுதியுள்ளார். மனித உரிமை செயல்பாட்டாளரான இவர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயர் ஆய்வு மய்யத்தின் தலைவராக 2008 இல் நியமிக்கப்பட்டுக் குறிப்பிடத்தக்க பணியாற்றியவர். பெண்ணிய சிந்தனையாளரான வ. கீதா எழுத்து, மொழிபெயர்ப்பு, களச் செயல்பாட்டாளர் என  இயங்கி வருபவர். இவரும் எஸ்.வி. ராஜதுரையும் இணைந்து “பெரியார்: சுயமரியாதை சமதர்மம்” என்ற நூல் மிக முக்கியமான வரலாற்று ஆவணமாக திகழ்கிறது. – டாக்டர் அம்பேத்கர்
₹ 140.00 ₹ 140.00

Not Available For Sale

This combination does not exist.