தில்லையில் ஒரு கொள்ளைக்காரன்
| தில்லையில்
ஒரு கொள்ளைக்காரன் - அனுஷா வெங்கடேஷ் 14ஆம் நூற்றாண்டில் நடந்த முகமதியப் படையெடுப்பை தமிழ்நாடு எவ்வாறு எதிர்கொண்டது? சமணமும் பௌத்தமும் கிட்டத்தட்ட அழிந்திருந்த நிலையில், இந்து மதம் தனது விக்கிரகங்களை எவ்வாறு எதிரிகளின் கரங்களிலிருந்து காப்பாற்றியது? அரங்கம் முதல் தில்லைவரை, மதுரைமுதல் சீர்காழிவரை ஒவ்வொரு விக்கிரகத்தின் பின்னாலும் ஒரு கதை இருக்கிறது. இது தில்லையின் கதை. காணாமல் போன நடேசன் அதிசயத்திலும் அதிசயமாக மீண்டு வந்ததன் பின்னாலுள்ள ஓர் அசாதாரணக் கதை. அனுஷா வெங்கடேஷின் இந்த அபாரமான சரித்திர நாவல் தமிழ் வாசகர்களைக் கொண்டாட்டத்தில் ஆழ்த்தும் என்பது உறுதி. |