Skip to Content

திசை கண்டேன் வான் கண்டேன்

திசை கண்டேன் வான் கண்டேன் - சுஜாதா
ஆண்ட்ரமீடா காலக்ஸியில் உள்ள மிகவும் முன்னேறிய கிரகம் நோரா. அக்கிரகத்தினர் இன்டர் காலக்ஸி ரூட்டில் ஒரு மேம்பாலம் கட்டத் திட்டமிடுகிறார்கள். அதற்கு இடைஞ்சலாகக் குறுக்கிடும் பூமி கிரகத்தை அழிப்பதென்று முடிவெடுக்கிறார்கள். ஐக்கிய காலக்ஸி விதிகளின்படி எந்தக் கிரகத்தையும் அழிக்கும் முன் அந்தக் கிரகத்தின் தலைமைக்குச் செய்தி சொல்லவேண்டியது அவசியம். எனவே பூமியின் தலைமையகம் ஐ.நாவுக்கு தகவல் சொல்லி எச்சரிக்கை விடுக்க, நோரா கிரகத்தின் பிரஜை பாரி என்பவன் பூமிக்குப் புறப்படுகிறான். பேசும், பாடும், கவிதை சொல்லும் இயந்திர வாகனம் 121, மார்ஃப் என்கிற எந்த வடிவத்தையும் எடுக்கக்கூடிய சக்தி, பணத்தை உருவாக்கும் ரெப்ளிக்கேட்டர், ஆக்ஸிஜன் போல் ரிப்ரெஷ் அளிக்கும் ஆர்க்கான் குச்சிகள், நோராவில் அரசு மான்யத்தில் ஜீவிக்கும் உப தெய்வங்கள் என்று சுஜாதாவுக்கே உரிதான கற்பனை உச்சத்தில் அட்டகாசமான, ஆர்ப்பாட்டமான நகைச்சுவை விஞ்ஞானக் கதை.
₹ 190.00 ₹ 190.00

Not Available For Sale

This combination does not exist.