தேர்வு பயம் தேவை இல்லை
தேர்வு பயம் தேவை இல்லை - குன்றில் குமார்
தேர்வில் நிறைய மதிப்பெண்களைப் பெறுவேன் என்ற நம்பிக்கையில் உறுதியாக இருக்க வேண்டும். அப்போது தேர்வு பயம் உங்களிடம் அண்டவே அண்டாது. தடைகளைத் தகர்த்தெறிந்து மனதை ஒருமுகப்படுத்தி படிப்பை மட்டுமே ஒரே நோக்கமாகக் கொள்வது என்பது நிச்சயமாக சிரமமான காரியம்தான் என்றாலும் அதை மாணவர்கள் ஒவ்வொருவரும் செய்தே ஆக வேண்டும். அவர்களுக்குப் பெற்றோர்களும், அண்டை அயலார்களும் உதவ வேண்டும். ஒன்றை மட்டும் நீங்கள் எப்போதும் மறக்கவே கூடாது. அதாவது படிக்கும்போது இதனைச் சரியான முறையில் நம்மால் படிக்க முடியுமா என்றோ, அதனைப் படித்து நன்றாகத் தேர்வை எழுத முடியுமா என்றோ எள்முனையளவு சந்தேகம் கூட வரக்கூடாது.