Skip to Content

ரெண்டாம் ஆட்டம்!

ரெண்டாம் ஆட்டம்! - லஷ்மி சரவணகுமார்
மனித மனம் பலவித வண்ணங்களைக் கொண்டது. அது எப்போது எந்த வண்ணத்தை வெளிப்படுத்தும் என்பது சூழ்நிலையைப் பொருத்தது. ஆனாலும் கோபம் எனும் வண்ணம்தான் மனிதனின் எல்லா வன்முறைக்கும், தவறுகளுக்கும் அடிப்படையாகிறது. நேரான வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என நோக்கம்கொண்டவர்கள் பலரை கோபம், குரோதம் போன்றவை திசைமாற்றி வன்முறையின் பக்கம் இடறிவிடுகின்றன. வன்முறை உலகத்துக்குள் சென்றவர்கள் அதிலிருந்து வெளியே வரமுடியாமல் தங்கள் வாழ்வை இருள்களிலேயே முடித்துக் கொள்கிறார்கள். தூங்கா நகர் மதுரையையும் அதைச் சுற்றிலும் உள்ள பகுதிகளையும் கதைக்களமாகக் கொண்ட இந்த ரெண்டாம் ஆட்டம், ஆத்திர மனிதர்களும் சூழ்நிலையால் திசைமாறிய மனிதர்களையும், பழிக்குப் பழி என பகை கொண்டு உலவும் மனிதர்களையும் காட்டுகிறது. விறுவிறுப்பாகவும் எதிர்பாரா திருப்பங்களையும் கொண்டு ஜூனியர் விகடனில் வெளிவந்த ரெண்டாம் ஆட்டம் வாசர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் தொகுப்புதான் இது. கோபத்தில் எழும் மனிதர்களை பகடைகளாக்கி விளையாடும் வன்முறை அவர்களை எப்படியெல்லாம் கலைத்துப்போட்டு விடுகிறது என்பதை இந்த ரெண்டாம் ஆட்டம் சொல்கிறது. இனி, ரத்தச் சகதியில் நடந்தேறும் ரெண்டாம் ஆட்டம் காணுங்கள்.
₹ 650.00 ₹ 650.00

Not Available For Sale

This combination does not exist.