பயமுறுத்தும் இதயநோய்கள் குணமளிக்கும் நவீன சிகிச்சைகள்
பயமுறுத்தும் இதயநோய்கள் குணமளிக்கும் நவீன சிகிச்சைகள் - டாக்டர் சு. முத்து செல்லக் குமார் மாற்று இதயம் எல்லோருக்கும் பொருந்துமா? பேஸ்மேக்கர் பொருத்துவதால் பலன் உண்டா? மாரடைப்பைத் தவிர்ப்பது எப்படி? இதய வால்வு பாதிப்புக்கு என்ன சிகிச்சைகள்? சளியில் ரத்தம் கலந்து வந்தால் இதயத்தில் என்ன பிரச்னை? பெண்களுக்கு ஏற்படும் இதய நோய்களைத் தவிர்ப்பது எப்படி? என்பது உள்ளிட்ட இதயத்தில் ஏற்படும் பிரச்னைகளையும் அவற்றுக்கான நவீன சிகிச்சை முறைகளையும் எளிமையாக விளக்குகிறது இந்தப் புத்தகம். நூலாசிரியர், டாக்டர் சு. முத்து செல்லக் குமார், 1988-ல் டாக்டர் பட்டம் பெற்றவர். ருக்மணி மருத்துவத் தகவல் மையம் என்ற அமைப்பை ஏற்படுத்தி, அதன்மூலம் இலவச மருத்துவ முகாம்களை நடத்துவதுடன், இலவச மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார். இரண்டு முறை தமிழக அரசின் சிறந்த மருத்துவ நூலாசிரியர் என்ற விருது உள்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். |