Skip to Content

பத்மா

பத்மா - மாலா மகேஷ்
இந்தியாவின் பெரிய நவநாகரிக நகரமான மும்பையில் வசிக்கும் இருபத்தியொன்றாம் நூற்றாண்டைச் சேந்த நைனா, கேரளத்தில் மணலிக்கரை என்கிற சிற்றூரில் வசிக்கும் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த பத்மா இவர்கள் இருவரும்தான் இந்த நாவலின் நாயகிகள். அறிவியல் வளர்ச்சி, கூட்டுக் குடும்ப அமைப்பின் சிதைவு, நகரமயமாக்கல் உள்ளிட்ட பல முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்டு இவ்வளவு காலத்துக்கும் தூரத்துக்கும் அப்பால் இரு நாயகிகளும் ஒருவருக்கொருவர் ஆத்மார்த்தமாக பெண் என்கிற புள்ளியில் இணைகிறார்கள். மாலா மகேஷ் இந்த அம்சத்தைத் தன் கதை சொல்லும் முறையிலும் கைக்கொண்டுள்ளார். நாவல் முன்னும் பின்னுமாக பயணித்து வாசிப்புக்கும் சுவாரசியம் அளிக்கிறது. பத்மா என்கிற கதாபாத்திரத்தையும் மாலா உணர்வுபூர்வமாக உருவாக்கியுள்ளார். கூட்டுக் குடும்ப அமைப்பில் பத்மா, உள்பட பெண்கள் படும்பாடுகளை கோஷமாக அல்லாமல், இயல்புடன் மாலா விவரித்துள்ளார். சமூக முரண்களைச் சொல்லும் போக்கில் 1900 காலக்கட்டமும் திருத்தமாக உருவாக்கப்பட்டுள்ளது. நைனா கதாபாத்திரத்தின் வழி இன்றைய காலகட்டமும் வாழ்க்கையும் பதிவாகியுள்ளது. மனித மனங்களில் ஒரு நூற்றாண்டுக்காலமாக புதிய, அறிவியல் சித்தாந்தங்கள் ஓடினாலும் அவற்றினுள் பழைய அடிப்படைவாதச் சிந்தனைகளின் ஈரம் இருக்கவே செய்கிறது என்பதையும் நாவல் கதையின் ஊடே உணர்த்துகிறது.
₹ 400.00 ₹ 400.00

Not Available For Sale

This combination does not exist.