பதினெட்டாம் நூற்றாண்டின் மழை
பதினெட்டாம் நூற்றாண்டின் மழை - எஸ். ராமகிருஷ்ணன்
தனது கதைகளில் கற்பனைக்கும் யதார்த்தத்திற்கும் இடையில் அழகான சமநிலையை உருவாக்குகிறார் எஸ்.ராமகிருஷ்ணன். Jigsaw Puzzleல் ஒரு சில்லு இன்னொரு சில்லைப்போல இருப்பதில்லை. இந்த தொகுப்பில் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு வகையாக அமைந்துள்ளது. சிறுகதை எழுதுவோருக்கு பாடப்புத்தகமாக வைக்கக்கூடிய அளவுக்கு கதைகள் கச்சிதமாக நிறைவடைந்து இருக்கின்றன. நல்ல சிறுகதையின் இலக்கணம் அதை வாசித்து முடித்த பின்னர் நீங்கள் பார்க்கும் பார்வை விசாலமானதாக இருக்க வேண்டும் என்பவர்கள் உண்டு. புதுக் கண்கள் கிடைக்கும் என்பார்கள். இந்த நூலை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு புது உலகமே காத்திருக்கிறது. எல்லோரது கதைகளின் அடியிலும் சுயசரிதையின் மெல்லிய நீரோட்டம் ஓடிக் கொண்டிருக்கிறது. அது எழுத்தாளன் மட்டுமே அறிந்த நதி. இது எஸ்.ராமகிருஷ்ணனின் எட்டாவது சிறுகதைத் தொகுதி.