Skip to Content

பதின்

பதின் - எஸ்.ராமகிருஷ்ணன்
இளமைப் பருவம் அழகானது, இனிமையானது, சுவையானது என்பதை யாரும் மறுக்க முடியாது. யாரிடம் கேட்டாலும் பள்ளி வாழ்க்கையே சிறப்பானது என்பர். ஏன் என்றால் அந்தப் பருவத்தில் தான் நண்பன், தோழி, வகுப்பு, பாடங்கள், திருட்டு, சண்டை என உலகத்தைப் பற்றி நாம் கற்றுக் கொள்கிறோம். நமக்கு யார் முதல் நண்பன் என நினைத்துப் பார்த்தால், பல முகங்கள் நம் கண்முன்னே வந்து நிழலாடும். கண்டிப்பு, தண்டனை, பயமுறுத்தல், கட்டாயப்படுத்துதல் போன்றவற்றை சந்திக்காமல் யாராவது சிறுவர்கள் இருக்க முடியுமா? இப்படியான உலகத்தில் தான் சிறுவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். நாம் என்னதான் வயதில் பெரியவர்களாக இருந்தாலும் நம் மனதில் இளம் வயதின் நினைவுகள் வெண்மையான பாலாடைபோன்று ஏதோ ஒரு மூலையில் பசுமையாக இருக்கத்தான் செய்யும்.சிறுவர்கள் பேசும்போதும், விளையாடும் போதும்,சாலையில் நம்மைக் கடந்து செல்லும் போதும் நம்முடைய பதின் பருவத்தை தூண்டிவிட்டுத் தான் செல்கிறார்கள். இப்படியாக தான் வாழ்ந்த சிறு வயது அனுபவங்களுடன் கற்பனைக் கதைகளையும் சேர்த்து ‘பதின்’ என்ற நாவலை படைத்திருக்கிறார் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்.
₹ 250.00 ₹ 250.00

Not Available For Sale

This combination does not exist.