பன்முகப் பார்வையில் தாகூர்
பன்முகப்
பார்வையில் தாகூர் - வீ.பா.கணேசன் கடலளவு நீண்டிருக்கும் தாகூரின் படைப்புலகம் குறித்த ஓர் எளிய அறிமுகம். கவிஞர், பாடலாசிரியர், நாவலாசிரியர், சிறுகதை ஆசிரியர், இலக்கிய விமர்சகர், தத்துவஞானி, இசைவல்லுநர், நாடக ஆசிரியர், நடிகர், ஓவியர், கல்வியாளர், தேசபக்தர், மனிதநேயர், சர்வதேசவாதி, தீர்க்கதரிசி, வழிகாட்டி என அனைத்து வகையான செயல்பாடுகளையும் வெற்றிகரமாக நிறைவேற்றியவர் ரவீந்திரநாத் தாகூர். பன்முகத்தன்மையிலோ அல்லது கணக்கிடவொண்ணாத சாதனைகளிலோ, அவருக்கு இணையாக இன்னும் பலப்பல ஆண்டுகளுக்கு நாம் எவரையும் கண்டறியமுடியாது என்பது திண்ணம். தாகூரின் விரிவான வாழ்க்கை வரலாற்றைத் தொடர்ந்து அவருடைய சிந்தனைகளையும் பங்களிப்புகளையும் அலசி ஆராயும் இந்நூலை வீ.பா. கணேசன் திறன்பட உருவாக்கியிருக்கிறார். 21ஆம் நூற்றாண்டுக்கும் தாகூர் அத்தியாவசியமானவர் என்பதை அழுத்தந்திருத்தமாக இந்நூல் உணர்த்துகிறது. |