பன்முக அறிவுத் திறன்கள்
பன்முக அறிவுத் திறன்கள்: ஓர் அறிமுகம் - ம.சுசித்ரா
ஒரு நல்ல வேலை, ஆறு இலக்கச் சம்பளம், உயர் வாழ்க்கைத் தரம் இவற்றைப் பெற்றுத்தருவதே கல்வி என்று இந்தியா போன்ற நாடுகளில் கருதப்படுகிறது. பொருளாதாரத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இயங்கும் கல்வி அமைப்பில் வாசித்தல், மனப்பாடம் செய்து எழுதுதல், கணிதத் திறன் போன்றவை மட்டுமே சிறப்புத் திறன்களாகக் கருதப்படுவதிலும் வியப்பில்லை. இவற்றுக்கு அப்பாற்பட்ட பன்முக அறிவுத் திறன்கள் இருக்கின்றன என்பதை உளவியலாளர் ஹாவர்ட் கார்டனர் உலகத்துக்கு உணர்த்தினார். அவரது பன்முக அறிவுத் திறன்கள் கோட்பாடு உலகெங்கும் பள்ளி, கல்லூரிகளில் உள்ள கற்பிக்கும் முறைகளைக் கடந்த முப்பது ஆண்டுகளில் மாற்றி அமைத்துள்ளது. ஹாவர்ட் கார்டனரின் பன்முக அறிவுத் திறன்களை இந்திய, தமிழகச் சூழலில் எளிமையாகவும் ஆழமாகவும் அறிமுகம் செய்யும் நூல் இது. மொழித் திறன், தர்க்கம் மற்றும் கணிதத் திறன், காட்சித் திறன், உடல் மற்றும் விளையாட்டுத் திறன், இசைத் திறன், மனிதத் தொடர்புத் திறன், தன்னிலை அறியும் திறன், இயற்கைத் திறன், இருத்தல்சார் திறன் என்று ஒன்பது விதமான திறன்களை நூலாசிரியர் ம. சுசித்ரா ‘வெற்றி கொடி’ இணைப்பிதழில் தொடராக எழுதினார். வைரமுத்து, ஏ.ஆர். ரஹ்மான் தொடங்கிச் சுற்றுச்சூழல் போராளி வங்காரி மாத்தாயின் வாழ்க்கை வரை பன்முகத் திறன்கள் சார்ந்து இப்புத்தகத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். கல்வி சார்ந்து எழுதப்படும் புத்தகங்களில் இருக்கும் அதீதப் போதனாம்சமும் நடைமுறைக்கு ஒவ்வாத அணுகுமுறைகளும் இப்புத்தகத்தில் இல்லை. மனித உரிமைகள், சுற்றுச்சூழல், பாலினக் கல்வி, மாற்றுக் கல்வி ஆகியவை அக்கறைகளாக மட்டுமின்றி தனித் துறைகளாகவும் மாறியுள்ள உலகமயமாதல் சூழலில் பன்முக அறிவுத் திறன்களை அடையாளம் காண்பதும் அவற்றை மேம்படுத்துவதும் மனித வளத்தையும் ஆற்றலையும் எப்படிச் செழுமைப்படுத்தும் என்பதையும் சுசித்ரா தனது எடுத்துக்காட்டுகள் வழியாக இணைக்கிறார். போட்டிகள், மோதல்களையும் சமத்துவமின்மையையும் ஏற்படுத்தும் சூழலில் பன்முகத் திறன்களை அடையாளம் கண்டால் மாற்றம் சாத்தியம். ஒவ்வொரு குழந்தையின் இயல்புக்கேற்ற திறன்களை ஊக்குவிக்கும் சமூகத்தில் எல்லாருடைய ஆற்றலுக்கும் பணிக்கும் பங்களிப்புக்கும் மதிப்பு இருக்கும். கற்பதிலும் கற்பித்தலிலும் பெரும் மாற்றத்தை உலகம் முழுவதும் உருவாக்கிக் கொண்டிருக்கும் பன்முக அறிவுத் திறன்கள் கோட்பாட்டை அறிமுகம் செய்யும் இந்தப் புத்தகம் அனைவரது வீட்டிலும் இருக்க வேண்டியது அவசியம்.