Skip to Content

பணம் பத்திரம்

பணம் பத்திரம் - செல்லமுத்து குப்புசாமி
பணத்தை எப்படிச் சேமிக்கலாம்? சேமிப்பை எதில் முதலீடு செய்யலாம்? எப்படி அதிகரிக்கலாம்? பர்சனல் ஃபைனான்ஸ் பற்றி எளிமையான அறிமுகம். பர்சனல் ஃபைனான்ஸ் பற்றி ”புதிய தலைமுறை” இதழில் வெளிவந்து பரவலாக பயனளித்த தொடரின் நூல் வடிவம். எனக்குப் பணம் சம்பாதிப்பது பிடிக்காது என்றோ இருக்கும் பணமே போதும் என்றோ சொல்பவர்கள் நம்மில் ஒருவர்கூட இருக்கமாட்டார்கள். இருந்தும் பணம் குறித்து நாம் எந்த அளவுக்கு வெளிப்படையாக உரையாடியிருக்கிறோம்; எந்த அளவுக்கு ஆழமான அலசல்களை மேற்கொண்டிருக்-கிறோம் என்று பார்த்தால் வியப்பே மிஞ்சும். காரணம், நாம் பணத்தைப் பற்றிப் பொதுவெளியில் பேசுவதேயில்லை! உங்கள் தயக்கத்தை உடைத்தெறிந்து பணம் பற்றிய ஓர் ஆரோக்கியமான உரையாடலைத் தொடங்குவதே இந்தப் புத்தகத்தின் நோக்கம். · வருமானத்துக்கு மீறி செலவுகள் செய்து தத்தளித்துக் கொண்டிருக்-கிறீர்களா? கடன் உங்களை அச்சுறுத்துகிறதா? · சேமிப்பதற்கு என்னென்ன வழிகள் இருக்கின்றன என்று உங்களுக்குத் தெரியுமா? · செலவுக்கும் முதலீட்டுக்குமான அடிப்படை வேறுபாட்டை நீங்கள் அறிவீர்களா? வீடு, நிலம், தங்கம் ஆகியவற்றில் முதலீடு செய்வது சரியானதா? பங்குச் சந்தையில் எப்படி முதலீடு செய்யவேண்டும்? · ஆயுள் காப்பீடு என்பது வரி விலக்குக்கான ஒரு வழி என்று உங்களுக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்டிருக்கிறதா? காப்பீடு, முதலீடு, சேமிப்பு எல்லாமே ஒன்று என்று நினைக்கிறீர்களா? இழக்காதே, வாரன் பஃப்பெட் உள்ளிட்ட புகழ்பெற்ற நூல்களை எழுதிய செல்லமுத்து குப்புசாமியின் இந்நூல் பர்சனல் ஃபைனான்ஸ் பற்றிய மிக அடிப்படையான, மிக எளிமையான அறிமுகத்தை உங்களுக்கு வழங்குகிறது.

₹ 160.00 ₹ 160.00

Not Available For Sale

This combination does not exist.