Skip to Content

பணம் சில ரகசியங்கள்

பணம் சில ரகசியங்கள் - சோம. வள்ளியப்பன்

எதற்குப் பணம் சம்பாதிக்கவேண்டும்? எவ்வளவு சம்பாதிக்கவேண்டும்? சம்பாதித்ததை என்ன செய்யவேண்டும்? எளிமையாகத் தோன்றினாலும் இந்த மூன்று கேள்விகளுக்கு விடையளிப்பது கடினம். ஆயிரம் வாசல்கள் வழியாக உள்ளே வருவதற்கும் இன்னும் ஆயிரம் வாசல்கள் வழியே வெளியில் செல்லவும் பணம் தயாராக இருக்கிறது. எந்தெந்த கதவுகளைத் திறந்துவைக்கவேண்டும்? எவற்றையெல்லாம் மூடி வைக்கவேண்டும்? பணம் ஒரு கருவி மட்டுமே. அது வாழ்க்கைக்கு அவசியம். ஆனால் வாழ்க்கை என்பது அது மட்டுமேயல்ல என்கிறார் நூலாசிரியர் சோம. வள்ளியப்பன். சரியான இலக்குகளை அமைத்துக்கொள்ளாவிட்டால் பணம் நம்மை, நம் பணி வாழ்வை, நம் குடும்ப உறவுகளை, நம் எதிர்காலக் கனவுகளைப் பாதிக்கும் என்றும் அவர் எச்சரிக்கிறார். பங்குச்சந்தை, சுய-முன்னேற்றம், நிர்வாகவியல் என்று பல துறைகளில் இயங்கிவரும் சோம. வள்ளியப்பனின் இந்நூல் பணம் குறித்து நாம் தெரிந்துகொள்ளவேண்டிய சில முக்கியமான ரகசியங்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறது.

₹ 175.00 ₹ 175.00

Not Available For Sale

This combination does not exist.