Skip to Content

பிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை!

பிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை! - லதானந்த்
ஆன்மிகப் பயணம் என்பது கோயில், மகான்களின் சமாதி ஆகியவற்றை தரிசிப்பதுடன் பயணமும் செய்வது. இதில் இரண்டு விஷயங்கள் அடங்கியிருக்கின்றன. கோயிலுக்குச் செல்வது வரை புது இடத்தில் பயணம் செய்வது; அதில் பெறும் அனுபவம். பிறகு கோயிலின் தல வரலாறு, தல விருட்சம் விக்கிரகங்களின் விசேஷங்கள் ஆகியவற்றை நன்கு தெரிந்து கொண்டு மன நிறைவுடன் ஆண்டவனை தரிசிப்பது. போய் வந்த பிறகு இதைப் பார்க்கவில்லையே என்று வருந்தாமல் பார்த்துவிட்டு வருவது. வட நாட்டில் விஷ்ணு கோயில்களைப் பற்றி குறிப்பாக வைணவ திவ்ய தேசத் திருத்தலங்களைத் தரிசித்ததைப்பற்றிய பயணக் கட்டுரைகளாக எழுதியிருக்கிறார் நூல் ஆசிரியர் லதானந்த். பயணம் செல்லும் அனுபவம், கோயில்களை தரிசிக்கும் அனுபவம் ஆகிய இரண்டு விஷயங்களையும் இதில் அடக்கியிருக்கிறார். கோயில் சிறப்புகளும், பயணங்களில் ஏற்படும் திடீர்த் திருப்ப அனுபவங்களும், அவற்றைத் தவிர்க்கும் விளக்கங்களும் இந்த நூலில் இருக்கின்றன. அந்தந்த ஊர்களின் வழக்கு, சிறப்பு, ஊர்ப் பெயர் வந்த காரணம், முக்கியமான பெரிய ஊர்கள் அருகில் இருந்தால் அவற்றிலிருந்து தரிசிக்கும் தலம் எவ்வளவு தொலைவில், எந்தத் திசையில் இருக்கிறது போன்ற அவசியமான பல தகவல்கள் தரப்பட்டிருக்கின்றன. சில இடங்களில் ஏற்படும் தொல்லைகள் குறித்த தகவல்கள் பயனுள்ளவை. குரங்கு, மற்ற மிருகங்களின் தொல்லை, மனிதத் தொல்லை, நில அமைப்பால் ஏற்படும் தொல்லை ஆகியவற்றையும் அதிலிருந்து தற்காத்துக்கொள்ளும் முறைகளும் உள்ளன. சக்தி விகடனில் வெளிவந்த தொடர் இப்போது நூல் வடிவில் வந்திருக்கிறது. வட நாட்டுக் கோயில்களைத் தரிசிக்க விழைபவர்களுக்குப் பயனுள்ள வழிகாட்டி. இதிலுள்ள நுணுக்கங்களைத் தெரிந்து கொண்டால் அதிகத் தொல்லை இல்லாமல் வட நாட்டு யாத்திரை செய்யலாம்!
₹ 90.00 ₹ 90.00

Not Available For Sale

This combination does not exist.

Terms and Conditions
30-day money-back guarantee
Shipping: 2-3 Business Days