Skip to Content

பிரபல கொலை வழக்குகள் - பாகம் 1

பிரபல கொலை வழக்குகள் - பாகம் 1 - SP. சொக்கலிங்கம்

எம்ஜிஆரைச் சுட்டுவிட்டுத் தன்னையும் சுட்டுக்கொண்டார் எம்ஆர் ராதா. இருவரும் உயிர் பிழைத்தது எப்படி? எம்ஜிஆர் கொலை முயற்சி வழக்கு எப்படி நடத்தப்பட்டது? இறந்துபோன ஜமீன் இளவரசர் ஒருவர் பல்லாண்டுகள் கழித்து, சந்நியாசியாகத் திரும்பிவந்தபோது, ஒட்டுமொத்த இந்தியாவின் கவனமும் அவர்மீது திரும்பியது. அவர் உண்மையிலேயே இளவரசரா அல்லது ஜமீனின் சொத்துகளை அபகரிக்க வந்தவரா? இந்தச் சிக்கலை விடுவிக்க எடுக்கப்பட்ட முயற்சிகளும் உண்மையை நிரூபிக்கத் தொடுக்கப்பட்ட வழக்கும் மர்ம நாவலைவிடவும் விறுவிறுப்பானவை. திடுக்கிடச் செய்யும் விசாரணை விவரங்கள். ஜின்னா, ஒரு கொலை வழக்கில் வாதாடியதும் அதில் தோற்றுப்போனதும் தெரியுமா? தமிழகத்தை உலுக்கிய விஷ ஊசிக் கொலைகள் எப்படி முடிவுக்கு வந்தன? குற்றவாளிகள் எப்படிப் பிடிபட்டனர்? சென்னை எழும்பூரிலிருந்து ராமேஸ்வரம் சென்ற ரயிலில், ஒரு டிரங்குப் பெட்டியில், தலையில்லாத மனித உடல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. பின்னாட்களில், தூர்தர்ஷனில் தொடர் நாடகமாக மாறி பார்வையாளர்களைக் கிடுகிடுக்க வைத்தது இந்தக் கொலைச்சம்பவம். க்ரைம் நாவல்களை விடவும் சுவாரஸ்யமான, விறுவிறுப்பான? பல பிரபலமான கொலை வழக்குகளும் பின்னணி விசாரணைத் தகவல்களும் இந்நூலில் விரிவாக இடம்பெற்றுள்ளன. இந்த வழக்குகளை வழக்கறிஞர் SP. சொக்கலிங்கம் பதைபதைக்கச் செய்யும் எழுத்து நடையில் நமக்கு அறிமுகம் செய்கிறார்.

₹ 190.00 ₹ 190.00

Not Available For Sale

This combination does not exist.

Terms and Conditions
30-day money-back guarantee
Shipping: 2-3 Business Days