Skip to Content

பிசியோதெரபி

பிசியோதெரபி : வலி தீரும் வழிகள் - டாக்டர் எஸ். லட்சுமணன்
உலகெங்கும் நிறைந்திருப்பது எது என்று கேட்டால் காற்று, கடவுள் என்று ஒவ்வொருவரும் தனக்குத் தெரிந்ததைச் சொல்வார்கள். ஒரு சிலர் வலி என்று சொல்லக்கூடும். அந்த வகையில், தலையில் இருந்து பாதம் வரை வலியால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தப் புத்தகத்தில், நம் உடலில் ஏற்படும் வலிகளுக்கான காரணங்களும், அவற்றைத் தீர்க்கும் வழிகளும் என்னென்ன? வலி தொடரும் பட்சத்தில் பிசியோதெரபி முறையில் தீர்ப்பது எப்படி? பிசியோதெரபி செயல்முறைகள், தன்மைகள் என்னென்ன? என்பது உள்ளிட்ட பல விஷயங்கள் விளக்கப்-பட்டுள்ளன. மொத்தத்தில் வலியில்லா வாழ்க்கை வாழ விரும்பும் அனைவரது கைகளிலும் இருக்கவேண்டிய புத்தகம் இது. நூலாசிரியர் எஸ். லட்சுமணன், 1996ம் ஆண்டு சென்னையில் உள்ள யூ.சி.ஏ. காலேஜ் ஆஃப் பிசியோதெரபியில் பட்டம் பெற்றவர். தற்போது சென்னை நந்தனத்தில் உள்ள வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் முதன்மை பிசியோதெரபிஸ்டாகப் பணியாற்றி வருகிறார். இது, இவருடைய முதல் புத்தகம்.
₹ 160.00 ₹ 160.00

Not Available For Sale

This combination does not exist.