Skip to Content

பெரியார் தமிழியல் ஆய்வறிஞர்களும்

பெரியார் தமிழியல் ஆய்வறிஞர்களும் - பொதியவெற்பன்
நூல் குறிப்பு:
பெரியாரையும் திராவிடர் இயக்கத்தையும் தொடர்ந்து அவதூறு செய்து வரும் இந்துத்துவ இலக்கிய மனநோயாளிகளையும் திரிபுவாத தமிழ்த் தேசியர்களையும் தொடர்ந்து அம்பலப்படுத்தி வரும் தோழர் பொதியவெற்பன், இந்நூலில் பெரியார் தமிழறிஞர்களை புறக்கணித்தார். இருட்டடிப்பு செய்தார் என்கிற பொய்மை வாதங்களை முறியடிக்கும் விதமாக தமிழறிஞர்களின் படைப்புகளிலிருந்து திரட்டிய வரலாற்று சான்றாதாரங்களை கொண்டே முறியடிப்பதோடு, பெரியாருக்கும் தமிழறிஞர்களுக்குமான பண்பாட்டுப் போராட்ட உணர்வு ஓர்மைகளிலிருந்தும் உறவுநிலைகளின் செழுமையிலிருந்தும் தனித்தறிந்து தேடியெடுத்த குறிப்புகளைக் கொண்ட உரையாடல் பிரதியாக இக்குறுநூலை நம்முன் வைத்துள்ளார். பெரியாரை ஒரு தீர்க்கமான உரையாசிரியராக அணுகி விவாதிக்கும் இத்தொகுப்பின் கட்டுரை தனித்துவமானது மட்டுமல்ல; தர்க்க சுவையானதும் கூட.
ஆசிரியர் குறிப்பு:
வே. மு. பொதியவெற்பன் 75 வயது கண்ட பவளவிழா நாயகன். நெல்லையில் பிறந்த அவர் சிறந்த கவிஞர், இலக்கிய திறனாய்வாளர், சிலிக்குயில் புத்தகப் பயணம் என்ற பதிப்பகத்தின் பதிப்பாளர். ‘முனைவன்’ என்ற சிற்றிதழை நடத்தியவர். ‘மணிக் கொடி’ இதழின் பொன்விழா மலரைக் கொண்டு வந்தவர். ‘நிறப்பிரிகை’ இதழின் ஆசிரியர் குழுவில் பணியாற்றியுள்ளார். பதினைந்திற்கும் மேற்பட்ட ஆய்வுகட்டுரைகளை எழுதியுள்ள இவர் ‘பறை’ தொகை நூலையும் வெளியிட்டுள்ளார்.
₹ 60.00 ₹ 60.00

Not Available For Sale

This combination does not exist.