Skip to Content

போர் இன்னும் ஓயவில்லை

போர் இன்னும் ஓயவில்லை - ஷோபாசக்தி
​ஷோபாசக்தியிடம், நாவல், சிறுகதைகள் கட்டுரைகள் என்பதையும் தாண்டி உரையாடுவதற்கு நிறையக் கதைகள் உண்டு. அவற்றை பெறுவதற்கு தட்டையான தமிழ்த் தேசியத்திற்கும் அப்பாற்பட்ட காதுகளே நமக்கு தேவை. இனவெறியன் ராஜபக்சேவையும், இந்தியப் பார்ப்பனியத்தையும் போன்றே விடுதலைக்கோரும் நாமும், சாதியொழிப்பு, பெண்கள் விடுதலை, சிறுபான்மையினர் பிரச்சினை, மாற்றுப்பால் நிலையினர், எல்லாப் போர்களிலும் சூறையாடப்படும் குழந்தைகள், இன்னும் வகைப்பாடுகளின் மாதிரி வெளிச்சங்களுக்குள் வராத மனிதக் கதையாடல்கள் சனநாயக உரையாடல்கள் என எல்லாவற்றையும் நிராகரித்துவிட்டு எந்த விடுதலையையும் பெற முடியாது. அப்படியான உரையாடல்களை கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நிகழ்த்தி வருபவர் ஷோபா. அவரது எழுத்தில் வந்து போகும் வெவ்வேறு புலங்களின் மனிதர்களைப் போன்றே வெவ்வேறு விடுதலை சித்தாந்தங்களை முன் வைத்து இயங்கும் மனிதர்களோடும் இதழ்களின் நடத்திய உரையாடல்களின் பல்வேறு கால மனநிலை சார்ந்த விவாதங்களை வாசகர்கள் உணரவும், இப்பிரதிக்கு அப்பால், இன்னொரு உரையாடலை ஏற்படுத்தவும் இயலும்.
₹ 160.00 ₹ 160.00

Not Available For Sale

This combination does not exist.