போபால் அழிவின் அரசியல்
போபால்
அழிவின் அரசியல் - மருதன் இன்றைய தேதி வரை இருபத்து மூன்றாயிரம் பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ‘ஆயிரக்கணக்கான சடலங்கள் இறைந்து கிடக்கின்றன. எந்தப் பக்கம் திரும்பினாலும் மனித உடல்கள். அல்லது, இறந்துகொண்டிருக்கும் மனிதர்கள்.’ - ஹமீதியா மருத்துவமனையில் ஒரு தன்னார்வலர் நிரந்தரமாகவும் பகுதியளவிலும் முடமாகிப்போனவர்கள், ஐந்து லட்சம் பேர். ‘அதற்கு முன்புவரை நான் மருத்துவமனை சென்றதில்லை. விஷ வாயு சுவாசித்த பிறகு மருத்துவமனையே பழியாகக் கிடக்கிறேன். சரி இத்தோடு சரியாகிவிடும் என்று ஒவ்வொரு முறையும் சொல்லிக்கொள்வேன். இருபத்தைந்து ஆண்டுகள் முடிந்துவிட்டன. இன்னமும் என் உடல் நடுங்குகிறது.’ |