Skip to Content

போக்காளி

போக்காளி - நவமகன்
நூல் குறிப்பு:

தெரிந்த வரலாற்றின் திகைப்பான பக்கங்களாய் புலப்பெயர்வு அனுபவங்களும் முப்பது ஆண்டுகளை ஒரு கால இயந்திரமாக கைக் கொண்டும் தகவல் ஓர்மையும் குவி மய்யமிட்டு கொண்டும் மிகை நாடாமல் நேர்மை எழுத்தை முன் வைத்து வசிகரிக்கிறது இந்நாவல். ஆயுதப் போராட்டத்தை புற வெளியிலும் பண்பாட்டு போராட்டத்தை வதிவிட அகவெளியிலும் நிகழ்த்தி பார்க்கக் கூடிய ஈழத் தமிழ் சமூகத்தின் மன நலம், இன நலம் சார்ந்த மோதல்களை தர்க்க வெளியில் வைத்து விவாதிக்கும் இந்நாவல், ஈழ-புகலிட-தமிழக வெளிகளில் விடுபட்டிருந்த புதிய உரையாடல்களையும் புரிதல்களையும் கூர்மையாக முன்னெடுக்கும் என நினைக்கிறோம்.
ஆசிரியர் குறிப்பு:
இயற்பெயர் நவரட்னம் கேதீஸ்வரன். யாழ்ப்பாணம் வேலணையில் பிறந்து நார்வேயில் வசித்து வருபவர். இருபதாவது வயதிலிருந்தே நவமகன் எனும் புனைபெயரில் கவிதைகள், சிறுகதைகள் எழுதியதன் மூலமாக அய்ரோப்பாவில் வெளியான சஞ்சிகைகள் பத்திரிகைகளில் அறியப்பட்டவர். போக்காளி இவருடைய முதலாவது நாவல்.
₹ 800.00 ₹ 800.00

Not Available For Sale

This combination does not exist.