Skip to Content

பொன்னியின் செல்வன் : சுருக்கப்பட்ட வடிவம்

பொன்னியின் செல்வன்  : சுருக்கப்பட்ட வடிவம் - கல்கி

இன்றைய தலைமுறைக்கான சுவையான சுருக்கப்பட்ட வடிவம். கல்கியின் எளிய, குதிரைப் பாய்ச்சல் நடையில். வரலாறும் கற்பனையும் அற்புதமாக ஒன்றிணையும் பிரமாண்டமான பெருநாவல், கல்கியின் பொன்னியின் செல்வன். தலைமுறைகள் கடந்து பல லட்சக்கணக்கான வர்களால் திரும்பத் திரும்ப வாசிக்கப்படும், புதிய வாசகர்களை இன்னமும் கண்டடைந்து கொண்டே இருக்கும் மகத்தான வரலாற்றுப் புதினம் இது. தமிழ் வரலாற்றின் பொற்காலம் என்று புகழப்படும் சோழர்களின் காலத்தை இந்நாவல் போல் நம் கண் முன்னால் கொண்டுவரும் இன்னொரு அற்புதப் படைப்பு இதுவரை தமிழில் எழுதப்படவில்லை. சோழர்களின் வரலாற்றைச் சரித்திர நூல்களிலிருந்து அறிந்துகொண்டதைக் காட்டிலும் பொன்னியின் செல்வனிலிருந்தே பெரும்பாலான தமிழர்கள் ஆர்வத்தோடு கற்றிருக்கிறார்கள். தமிழர்களின் உயிரோடும் உணர்வோடும் ஒன்றிக் கலந்துவிட்ட பொன்னியின் செல்வனின் அழகிய, கையடக்க வடிவம் இந்நூல். ஒரு மகத்தான சாகச உலகம் உங்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது. முழுக்க, முழுக்க கல்கியின் எழுத்துகளிலிருந்தே சுருக்கப்பட்டிருப்பதால் மூல நூலின் நடையும் சுவையும் நூறு சதவிகிதம் இதிலும் இடம்பெற்றிருக்கின்றன.

₹ 300.00 ₹ 300.00

Not Available For Sale

This combination does not exist.