பாதி ராஜ்யம்
பாதி
ராஜ்யம் - சுஜாதா இப்படித்தான் நகரப்போகிறது என்று எந்த நொடியில் நீங்கள் யூகிக்க ஆரம்பிக்கிறீர்களோ அந்த நொடியில்தான் கதை புது வேகம் எடுத்து புது திசையில் பயணம் செய்யும். இப்படித்தான் முடியப்போகிறது என்று சர்வநிச்சயமாக எப்போதெல்லாம் முடிவெடுக்கிறீர்களோ அப்போதெல்லாம் ஏமாந்துபோவீர்கள். யூகிக்க முடியாத திடுக் திருப்புமுனைக் கதைகளுக்காகக் கொண்டாடப்படுபவர் ஆங்கில சிறுகதையாசிரியரான ஓ. ஹென்றி. தமிழ் சிறுகதை உலகத்தில் இந்தச் சாதனையை நிகழ்த்தியிருப்பவர் சுஜாதா என்று இந்தச் சிறுகதைகளை வாசித்துவிட்டு அடித்துச் சொல்லலாம். கவனம்... கண்ணைக் கட்டிக்கொண்டு கொடைக்கானலில் கொண்டை ஊசிகளைக் கடக்கப் போகிறீர்கள். |